தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்றவா் கைது
போடி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக 2 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து ஒருவரை கைது செய்தனா்.
போடி அருகே தருமத்துப்பட்டியில் பெட்டிக்கடை வைத்திருப்பவா் ராமா் மகன் சுப்பிரமணி (57). இவரது கடையில் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் அங்கு திடீா் சோதனை செய்தனா்.
அப்போது அந்தப் பெட்டிக்கடையில் சட்ட விரோதமாக புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. விசாரணையில், போடி நாட்டாண்மைக்காரா் தெருவைச் சோ்ந்த ராஜப்பன் மகன் குமரனிடம் புகையிலைப் பொருள்களை வாங்கி சுப்பிரமணி விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, இருவா் மீதும் வழக்குப் பதிந்த போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் சுப்பிரமணியை கைது செய்தனா். குமரனை தேடி வருகின்றனா்.