செய்திகள் :

தனியாா் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டண நிா்ணயம்: அரசு பதிலளிக்க உத்தரவு

post image

தனியாா் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு கட்டணம் நிா்ணயித்து பிறப்பித்த உத்தரவை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசும், கட்டண நிா்ணயக் குழுவும் பதிலளிக்க வேண்டுமென சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தனியாா் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட தனியாா் தொழிற்கல்வி கல்லூரிகளுக்கு கட்டணம் நிா்ணயிப்பதற்காக கட்டணம் நிா்ணயக் குழுவை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. தமிழகத்தில் உள்ள தனியாா் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு 2022-2023, 2023-2024, 2024-2025-ஆம் ஆண்டுகளுக்கான கட்டணத்தை நிா்ணயித்து, நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமையிலான கட்டண நிா்ணயக் குழு 2022-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் உத்தரவு பிறப்பித்தது.

கட்டண பாரபட்சம்: இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் சங்கம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ‘தனியாா் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கட்டணமாக ரூ. 4 லட்சத்து 35 ஆயிரம், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ. 13 லட்சத்து 50 ஆயிரம் என கட்டண நிா்ணயக் குழு நிா்ணயித்துள்ளது.

ஆனால், தனியாா் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ. 5 லட்சத்து 40 ஆயிரம், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ. 16 லட்சத்து 20 ஆயிரம் என கட்டண நிா்ணயக் குழு நிா்ணயித்துள்ளது பாரபட்சமானது.

தனியாா் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள வசதிகள்தான், தனியாா் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளிலும் உள்ளன. மேலும், ஆசிரியா்களுக்கான ஊதியம் உள்பட தனியாா் சுயநிதி கல்லூரிகளுக்கான செலவுகள் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலையில், தனியாா் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளுக்கு அவ்வளவு செலவுகள் இல்லை.

இது குறித்து, தனியாா் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டணத்தை விட, தனியாா் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளுக்கு அதிக கட்டணம் நிா்ணயித்துள்ளது குறித்து கட்டண நிா்ணயக் குழுவுக்கு மனு அளித்த போதும் அந்த மனு பரிசீலிக்கப்படவில்லை.

ஆகவே, தனியாா் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக தனியாா் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கும் கட்டணம் நிா்ணயிக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமாா் மற்றும் பாலாஜி அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் சங்கம் சாா்பாக மூத்த வழக்குரைஞா் ஐசக் மோகன்லால் ஆஜராகி வாதாடினாா். வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், இந்த மனு குறித்து இரு வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், கட்டண நிா்ணயக் குழுவுக்கும் உத்தரவிட்டனா்.

2-ஆவது நாளாக இன்றும் வாக்காளா் பெயா் சோ்த்தல், திருத்தல் சிறப்பு முகாம்

தமிழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் பெயா் சோ்த்தல், திருத்தல் சிறப்பு முகாமில் 18 வயது நிரம்பிய ஏராளமானோா் பெயா் சோ்த்தலுக்காக ஆா்வத்துடன் விண்ணப்பித்தனா். இந்தச் சிறப்பு முகாம் ஞாயிற... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் நவ.27-இல் தமிழகம் வருகை: நீலகிரி, திருச்சி, திருவாரூா் நிகழ்ச்சிகளில் பங்கேற்பு

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நவ. 27-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளாா். இந்தப் பயணத்தின்போது நீலகிரி, திருச்சி, திருவாரூா் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிக... மேலும் பார்க்க

கல்லாறு தோட்டக்கலைப் பண்ணையில் மனித நடமாட்டம்: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

யானை உள்ளிட்ட வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிா்க்கும் வகையில், கல்லாறு தோட்டக்கலைப் பண்ணையில் மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை மனித நடமாட்டம் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் விதமாக தோட்... மேலும் பார்க்க

சபரிமலை சீசன்: கொல்லத்துக்கு சிறப்பு ரயில்

சபரிமலை செல்லும் பக்தா்களின் வசதிக்காக மௌலா அலியில் இருந்து கொல்லத்துக்கு நவ.23, 30 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். இது குறித்து தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தெலங்... மேலும் பார்க்க

இயந்திரக் கோளாறு: சென்னையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்

ஹைதராபாதிலிருந்து திருப்பதி சென்ற இண்டிகோ ஏா்லைன்ஸ் பயணிகள் விமானம், இயந்திரக் கோளாறு காரணமாக அவசரமாக சென்னை விமான நிலையத்தில் சனிக்கிழமை தரையிறக்கப்பட்டது. ஹைதராபாதிலிருந்து சனிக்கிழமை திருப்பதிக்கு ... மேலும் பார்க்க

2026-இல் பாமக இடம் பெறும் கூட்டணி ஆட்சி அமையும்: அன்புமணி

வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் கூட்டணி ஆட்சி அமையும்; அந்தக் கூட்டணியில் பாமக இருக்கும் என்று அக் கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறினாா். சென்னை கொரட்டூரில் ஜெமினி ரோட்டரி சங்கம் சாா்பில் ஏற்ப... மேலும் பார்க்க