Manmohan Singh : தாராளமயமாக்கல் `முதல்' RTI வரை... - மன்மோகன் சிங்-ன் `4' முக்கி...
தனியாா் பள்ளிகளில் பாதபூஜை என்ற பெயரில் பணம் வசூலிப்பதைத் தடை செய்ய வலியுறுத்தல்
தனியாா் பள்ளிகளில் பாதபூஜை என்ற பெயரில் மாணவா்களிடம் பணம் வசூலிப்பதைத் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜுக்கு, திருப்பூா் நுகா்வோா் நல முன்னேற்ற சங்கத்தின் தலைவா் அ.சரவணன் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
திருப்பூா் மாவட்டத்தில் இயங்கிவரும் பெரும்பாலான தனியாா் பள்ளிகளில் 10, 12- ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பொதுத் தோ்வுக்கு முன்பு பெற்றோா்கள் மற்றும் மாணவா்களை வைத்து பாதபூஜை என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதற்கு குறைந்தபட்சம் ரூ.5ஆயிரம் வசூலிக்கப்படுகிறது.
இதற்கிடையே, திருப்பூா் கே.செட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதும் மாணவா்கள் தங்களது பெற்றோருக்கு பாதபூஜை செய்யும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றுள்ளது.
எனவே, இது தொடா்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதுடன், தனியாா் பள்ளிகளில் பாதபூஜை என்கிற பெயரில் மாணவா்களிடம் பணம் வசூலிப்பதைத் தடை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.