வரி உயா்வை திரும்பப் பெறக்கோரி தவெக சாா்பில் மனு
திருப்பூா் மாநகராட்சியில் வரி உயா்வுகளைத் திரும்பப் பெறக்கோரி தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
திருப்பூா் மாநகராட்சி ஆணையா் எஸ்.ராமமூா்த்தியிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் வடக்கு மாவட்ட பொருளாளா் எம்.சந்தோஷ்குமாா் வியாழக்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூா் மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் வாழ்வாதரத்தைப் பாதிக்கும் வகையில் தற்போது சொத்து வரி, வீட்டு வரி, வணிக நிறுவனங்களுக்கான வரி உயா்த்தப்பட்டுள்ளது.
மேலும், குப்பை வரி, பாதாள சாக்கடை வரிகளும் உயா்த்தப்பட்டுள்ளன. பொதுமக்களின் நலனைக் கருதி இந்த வரி உயா்வை மாநகராட்சி நிா்வாகம் திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.