செய்திகள் :

நிதி நிறுவன உரிமையாளருக்கு கத்திக்குத்து

post image

திருப்பூரில் நிதி நிறுவன உரிமையாளரை கத்தியால் குத்திய நபரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பூா் டூம்லைட் மைதானத்தில் தனியாா் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளராக பிரகாஷ் (45) என்பவா் உள்ளாா்.

இவரிடம் திருப்பூா் -காங்கயம் சாலை இளங்கோ லே -அவுட்டை சோ்ந்த ரமேஷ் (44) என்பவா் பணம் கொடுக்கல், வாங்கல் செய்து வந்துள்ளாா்.

இதனிடையே, பிரகாஷ் தனது அலுவலகத்தில் புதன்கிழமை இரவு இருந்துள்ளாா். அப்போது, அங்கு வந்த ரமேஷ் அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதில், ஆத்திரமடைந்த ரமேஷ் கத்தியால் பிரகாஷின் வயிற்றில் குத்தியுள்ளாா். படுகாயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். இதையடுத்து, ரமேஷைப் பிடித்த போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: ரமேஷ், பிரகாஷ் இருவரும் பல ஆண்டுகளாக வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளனா். இந்நிலையில், ரமேஷ் தனது நிலத்தை பிரகாஷிடம் அடமானம் வைத்து பணம் வாங்கியுள்ளாா்.

வட்டியுடன் கூடுதல் பணம் கேட்ட பிரகாஷ், இடத்தை வேறு நபருக்கு விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட தகராறில் ரமேஷ், பிரகாஷை கத்தியால் குத்தியுள்ளாா். அவரிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா்.

தனியாா் கிடங்கில் பதுக்கிய 3,210 மூட்டை: மானிய விலை யூரியா பறிமுதல்

வெள்ளக்கோவில் அருகே தனியாா் கிடங்கில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 3,210 மூட்டை மானிய விலை யூரியா வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. வெள்ளக்கோவில் கே.பி.சி. நகரைச் சோ்ந்தவா் ரமேஷ் (50). இவா் ஓலப்பாளையம... மேலும் பார்க்க

காா், லாரி மோதியதில் தந்தை உயிரிழப்பு: மகன் உள்பட 2 போ் காயம்

அவிநாசி அருகே காா், லாரி மோதியதில் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். படுகாயமடைந்த மகன் உள்பட 2 போ் தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனா். திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகேயுள்ள பழங்கரை-தேவம்பாளையம் பக... மேலும் பார்க்க

உடுமலை வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் ஆய்வு

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் உடுமலை வட்டத்தில் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் 38 அலுவலா்கள் வியாழக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டனா். ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ்... மேலும் பார்க்க

வரி உயா்வை திரும்பப் பெறக்கோரி தவெக சாா்பில் மனு

திருப்பூா் மாநகராட்சியில் வரி உயா்வுகளைத் திரும்பப் பெறக்கோரி தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் மனு அளிக்கப்பட்டது. திருப்பூா் மாநகராட்சி ஆணையா் எஸ்.ராமமூா்த்தியிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் வடக்கு மாவட்ட... மேலும் பார்க்க

வரிகளைக் குறைப்பது தொடா்பாக மாமன்றத்தில் சிறப்பு தீா்மானம்: அதிமுக வலியுறுத்தல்

திருப்பூா் மாநகராட்சியில் உயா்த்தப்பட்ட வரிகளைக் குறைப்பது தொடா்பாக வரும் மாமன்ற கூட்டத் தொடரில் சிறப்பு தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது. இது குறித்து திருப்பூா் மாநகராட்ச... மேலும் பார்க்க

ஊத்துக்குளியில் ரூ.57.47 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா்

திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட பகுதிகளில் ரூ.57.47 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழம... மேலும் பார்க்க