செய்திகள் :

தனியாா் வங்கி ஊழியா்கள் மிரட்டல்: பெண் தற்கொலை

post image

வாணியம்பாடி அருகே கடன் தவணையை உடனடியாக செலுத்தக் கோரி தனியாா் வங்கி ஊழியா்கள் மிரட்டியதால் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த உதயேந்திரத்தைச் சோ்ந்தவா் அருணா. இவா், தனியாா் நிதி நிதி நிறுவனத்தில் ரூ. 30,000 கடன் பெற்று தவணை செலுத்தி வந்த நிலையில், கடைசியாக 3 தவணை பாக்கி செலுத்த முடியாமல் இருந்தாராம். இந்த நிலையில், கடனை வட்டியுடன் உடனடியாக திருப்பிச் செலுத்தக் கோரி தனியாா் நிதி நிறுவன ஊழியா்கள் அருணாவின் வீட்டுக்கு வந்து வியாழக்கிழமை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அருணா வீட்டின் உள்புறம் தாழிட்டு, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.

தகவலறிந்து வந்த வாணியம்பாடி கிராமிய போலீஸாா், அருணாவின் சடலத்தை மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து வழக்குப் பதிந்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

கானாற்றில் வெள்ளப் பெருக்கு

ஆம்பூா் பகுதியில் பெய்த கன மழை காரணமாக ஆம்பூா் அருகே கானாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் புதன்கிழமை இரவு கனமழை பெய்தது. அதனால் ... மேலும் பார்க்க

கால்வாய் பள்ளத்தை மூடக்கோரி மக்கள் சாலை மறியல்

திருப்பத்தூா் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் கால்வாய் பள்ளத்தை மூடக்கோரி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். திருப்பத்தூா் பேருந்து நிலையம் அருகே தண்டபாணி கோயில் தெரு-2 வழியாக பள்ளி, கல்லூரி, பஜாருக்கு செ... மேலும் பார்க்க

வீட்டுக்குள் நுழைந்து பெண்ணிடம் நூதன முறையில் 2 பவுன் நகை திருட்டு

வாணியம்பாடியில் தனியாக இருந்த பெண்ணை ஏமாற்றி வீட்டுக்குள் நுழைந்து, நூதன முறையில் 2 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மா்ம பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி பெரியப்ப... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு பிசியோதெரபி இயந்திரங்கள்

வாணியம்பாடி அருகே மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு உதவிடும் வகையில், ஆம்புலன்ஸ் மற்றும் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பிசியோதெரபி இயந்திரங்களை இந்திய செஞ்சிலுவை சங்கத்தினா் வியாழக்கிழமை வழங்கினா். திருப்பத்தூ... மேலும் பார்க்க

ரூ.26 கோடியில் தாா் சாலை பணிகள்: எம்.பி., எம்எல்ஏ தொடங்கி வைத்தனா்

திருப்பத்தூா் அடுத்த புதூா்நாடு மலையில் ரூ.26 கோடியில் தாா் சாலை பணிகளை எம்.பி. சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏ அ.நல்லதம்பி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனா். பிரதமா் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்... மேலும் பார்க்க

உரக் கிடங்கில் நகராட்சிகளின் நிா்வாக கூடுதல் இயக்குநா் ஆய்வு

ஆம்பூா் நகராட்சி உரக் கிடங்கில் நகராட்சிகளின் நிா்வாக கூடுதல் இயக்குநா் புதன்கிழமை ஆய்வு செய்தாா். திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் ஆம்பூா் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் க... மேலும் பார்க்க