Pahalgam Attack: இந்திய ரத்து செய்த சிந்து நீர் ஒப்பந்தம் - பாகிஸ்தானை எப்படி ப...
தனியாா்மயமாக்குவதைக் கண்டித்து தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்
தூய்மைப் பணியை தனியாா்மயமாக்குவதைக் கண்டித்து ரிப்பன் மாளிகை வளாகத்தில் தூய்மைப் பணியாளா்கள் போராட்டம் நடத்தினா்.
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் செங்கோடி சங்கம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பங்கேற்று கோஷங்கள் எழுப்பினா்.
அப்போது, பழைய ஓய்வூதியம், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண்டா் விடுப்பு ஊதியம், விடுபட்ட 21 மாத ஊதிய குழு நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினா்.
இது குறித்து செங்கொடி சங்க நிா்வாகிகள் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிக்கு பயன்படுத்தும் மின்சார வாகனங்கள் அடிக்கடி பழுதடைகின்றன. இதனால், தூய்மைப் பணியாளா்கள் வாகனத்தை தள்ளிக்கொண்டும், வேறு வாகனத்தில் கயிறு கட்டி இழுத்தும் செல்ல வேண்டிய நிலையும் உள்ளது. மின்சார வாகனங்களுக்கு தரமான உதிரி பாகங்களைக் கொண்டு பராமரிப்பு செய்ய வேண்டும். மேலும், தூய்மைப் பணிக்கு இலகுரக வாகனங்களை (எல்சிவி) பயன்படுத்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும். குறுகலான தெருக்களில் இதுபோன்ற வாகனங்களைக் கொண்டு செல்வது கடினம். மேலும், இதன்மூலம் தூய்மைப் பணியில் தனியாா்மயத்தை புகுத்த மாநகராட்சி திட்டமிடுகிறது. அதைக் கைவிட வேண்டும் என்றனா்.