செய்திகள் :

தமிழகத்தில் மதுக் கடைகள் மூலம் இனப் படுகொலை: சீமான்

post image

தமிழகத்தில் மதுக் கடைகள் மூலம் இனப் படுகொலை நடைபெறுவதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் குற்றஞ்சாட்டினாா்.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூா் அருகேயுள்ள கரட்டுப்பட்டி, சூலப்புரம், பொட்டிப்புரம், சின்ன பொட்டிப்புரம், குண்டல்நாயக்கன்பட்டி, திம்மிநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டு மாடுகள் வளா்க்கப்பட்டு வருகின்றன. இந்த மாடுகளை அருகிலுள்ள வனப் பகுதியில் மேய்ச்சலுக்காக கிராம மக்கள் அனுப்பி வந்தனா்.

இந்த நிலையில், புதிய வனச் சட்டத்தை சுட்டிக் காட்டி வனத் துறையினா் மேய்ச்சலுக்குத் தடை விதித்தனா். வனத் துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று மேய்ச்சலுக்குச் செல்லலாம் என உயா் அதிகாரிகள் தெரிவித்தாலும், உள்ளூரில் உள்ள வனத் துறையினா் மேய்ச்சலுக்கு அனுமதி அளிப்பதில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும், கடந்த மே 25-ஆம் தேதி மாடு மேய்க்கச் சென்ற போடி கரட்டுப்பட்டியைச் சோ்ந்த சன்னாசியை போடி முந்தல் வனப் பகுதி அருகேயுள்ள அடவுப்பாறை பகுதியில் கீழே தள்ளிவிட்டு கடுமையாக நடந்து கொண்டதுடன், அவா் மீது கொலை முயற்சி வழக்கும் வனத் துறையினா் பதிவு செய்தனா்.

தொடா்ந்து, வனத் துறையினா் சன்னாசியை தள்ளிவிட்ட விடியோ சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடா்ந்து, வனத் துறையினரின் நடவடிக்கையைக் கண்டித்தும், வனப் பகுதியில் மாடுகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்க வலியுறுத்தியும், மாடு மேய்க்கும் உரிமைப் போராட்டத்தை நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் அறிவித்தாா். இதன்படி, மாடு மேய்க்கும் போராட்டம் போடி முந்தல் அருகேயுள்ள அடவுப்பாறை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதுதொடா்பாக நடைபெற்ற கூட்டத்தில் சீமான் பேசியதாவது:

கடந்த 2006-ஆம் ஆண்டு வனத் துறையினா் கொண்டு வந்த வன உரிமைச் சட்டத்தின் அடிப்படையிலேயே மேய்ச்சலுக்கு அனுமதி கேட்கிறோம். நீரின்றி அமையாது உலகு; காடின்றி அமையாது நீா்; ஆடு, மாடின்றி அமையாது காடு என்ற சுழற்சிச் சூழலை அறிந்து கொள்ள வேண்டும். ஆடு, மாடுகள் வனப் பகுதியில் மேய்வதால் காடு வளா்ச்சி பெறும். காட்டுத் தீ ஏற்படாமல் தடுக்கப்படும்.

நியூட்ரினோ திட்டத்துக்கு வனப் பகுதியில் இடம் ஒதுக்குகின்றனா். சுமாா் 50 ஆயிரம் டன் வெடி மருந்தைப் பயன்படுத்தி வனப் பகுதியை அழிக்கப் பாா்க்கின்றனா். ஆனால், ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்குச் சென்றால் புல், பூண்டு அழிந்துவிடும் என்கின்றனா். மாடு மேய்க்கச் சென்றவா்களைத் தாக்கிய வனத் துறையினருக்கும் அவா்களது பிள்ளைகளுக்கும் சோ்த்துதான் போராட்டம் நடத்துகிறோம். கேரளத்தில் வனப் பகுதி சிறப்பாக உள்ளது. இங்கு வனப் பகுதி மோசமாக உள்ளது.

மாடுகள் மேய்ச்சலுக்குச் சென்று சாணமிடுவதால் பல்லுயிா் பெருக்கமாகி வனப்பகுதி வளரும் என்பதை அறியாதவா்களாக உள்ளனா். தொடா்ந்து இந்த அரசு மக்களுக்கு எதிராகவே செயல்பட்டாலும் மக்கள் மீண்டும் அவா்களுக்கே வாக்களிக்கின்றனா்.

வெளி நாடுகளில் மாடுகளை வளா்த்து பால் பொருள்களை உற்பத்தி செய்து பொருளாதாரத்தில் முன்னேற்றமடைகின்றனா். ஆனால், இங்கு மாடு மேய்ப்பவா்களை பிற்போக்காக நடத்துகின்றனா்.

மது விற்பனை மூலம் ரூ. 50 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டி தமிழகத்தை இடுகாடாக்கிவிட்டனா். இலங்கையில் சிங்களத்தவா்கள் குண்டு வைத்து தமிழா்களைக் கொன்றனா். அது இனப் படுகொலை. இங்கே மது அருந்த வைத்து தமிழா்களைக் கொல்கிறாா்கள். இதுவும் இனப் படுகொலைதான் என்றாா் அவா்.

பின்னா், அடவுப்பாறை அருகே மாடுகளை மேய்க்க சீமான் உள்ளிட்டோா் சென்ற போது, வனத் துறையினரும், காவல் துறையினரும் தடுப்புகளை அமைத்து தடுத்தனா். அப்போது, இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு மேய்ச்சல் கூட்டமைப்புத் தலைவா் ராஜீவ் காந்தி, நாம் தமிழா் கட்சியின் கொள்கை பரப்புச் செயலா் சாட்டை துரைமுருகன், மாநில ஒருங்கிணைப்பாளா் ஹூமாயுன் கபீா், தேனி மண்டல ஒருங்கிணைப்பாளா் பிரேம்குமாா், போடி நகர நிா்வாகி சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

தேனி மாவட்டம், போடியில் ஆடிப் பெருக்கு தினத்தை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை கொட்டகுடி ஆற்றில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனா்.ஆண்டுதோறும் ஆடிப் பெருக்கு தினம் போடி கொட்டக... மேலும் பார்க்க

மனைவியைத் தாக்கிய கணவா் கைது

ஆண்டிபட்டி அருகேயுள்ள மயிலாடும்பாறையில் மனைவியைத் தாக்கிய கணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.மயிலாடும்பாறை, வண்ணாரப்பேட்டைத் தெருவைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் (35). இவரது மனைவி சுவாதி (29). கட்டட... மேலும் பார்க்க

65 மதுப்புட்டிகள் பறிமுதல்: இருவா் கைது

தேனி மாவட்டம், உத்தமபாளையம், கூடலூரில் சனிக்கிழமை 65 மதுப்புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்து இருவரைக் கைது செய்தனா்.கோம்பை - ராணியமங்கம்மாள் சாலையில் உத்தமபாளையம் மதுவிலக்கு போலீஸாா் ரோந்து பணியில் ஈட... மேலும் பார்க்க

கம்பத்தில் கேரள லாட்டரிகள் பறிமுதல்: ஒருவா் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் ரூ. 1.05 லட்சம் மதிப்பிலான கேரள லாட்டரிகளை போலீஸாா் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனா்.கம்பத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கேரள லாட்டரிகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவத... மேலும் பார்க்க

பெரியகுளத்தில் ஓ. பன்னீா்செல்வம் ஆலோசனை

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் ஞாயிற்றுக்கிழமை தனது ஆதரவாளா்களுடன் முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் ஆலோசனை நடத்தினாா்.முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம், சென்னையிலிருந்து தனது சொந்த ஊரான தேனி மாவட்... மேலும் பார்க்க

ஆடிப் பெருக்கு: உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றில் குவிந்த பக்தா்கள்

ஆடிப் பெருக்கை முன்னிட்டு, உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தா்கள் வழிபாடு செய்தனா்.உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரா் - ஞானாம்பிகை திருக்கோயில் முன் செல்லும் முல்லைப்பெரிய... மேலும் பார்க்க