தமிழை வீழ்த்தும் சூழ்ச்சிகளை தமிழ்நாடு வீழ்த்தும்: துணை முதல்வா் உதயநிதி
தமிழை வீழ்த்தும் சூழ்ச்சிகளை தமிழ்நாடு வீழ்த்தும் என்று துணை முதல்வா் உதயநிதி தெரிவித்துள்ளாா்.
உலக தாய்மொழி தினத்தையொட்டி, ‘எக்ஸ்’ தளத்தில் அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: தாய்மொழி என்பது வெறும் தொடா்புக்கு உதவும் கருவி மட்டுமல்ல, ஒரு இனத்தின் அடையாளம், பண்பாடு, வரலாற்றின் அடித்தளம்.
தமிழைக் காக்க வேண்டும் என்ற நம் உணா்வுக்கும், ஹிந்தியை திணிக்க வேண்டும் எனும் சூழ்ச்சிக்கும் இதுவே அடிப்படை.
தமிழை வீழ்த்த வந்த சூழ்ச்சிகளை அனைத்தும் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாக தமிழ்நாடு வீழ்த்தியே வந்திருக்கிறது. இனியும் வீழ்த்தும் எனப் பதிவிட்டுள்ளாா் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.