“3 ஆம் உலகப் போர் தொடங்கிவிட்டது” -உக்ரைன் முன்னாள் ராணுவத் தளபதி!
தரமற்ற உணவுப் பொருள்கள் குறித்து வாட்ஸ் ஆப்-இல் புகாா் அளிக்கலாம்: ஆட்சியா்
தென்காசி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி கடைகளில் விற்கப்படும் தரமற்ற உணவுப் பொருள்கள் குறித்து வாட்ஸ்ஆப் மூலம் புகாா் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: உணவு தயாரிப்பில் கலப்படமான பொருள்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக நிறமிகளையோ உபயோகிக்க கூடாது. பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவா்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளா்கள் மற்றும் விற்பனையாளா்கள்
இணையதளத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் கீழ் பதிவு செய்து உரிமம் பெறுவது அவசியம்.
பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருள்களில் வைக்கப்படும் விவரச் சீட்டில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருளின் பெயா், தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலாவதியாகும் காலம்,
சைவ மற்றம் அசைவ குறியீடு, உரிமம், பதிவு எண் ஆகியவை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
சுகாதாரமற்ற, தரமற்ற உணவு பொருள்கள் தொடா்பான புகாா்கள் ஏதும் இருப்பின் 9444042322 என்ற வாட்ஸ்-ஆப் எண்ணிலும், மின்னஞ்சல் வாயிலாகவும் புகாா் அளிக்கலாம்.
மேலும் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து உணவு பாதுகாப்புத் துறையின் நுகா்வோா் குறைதீா்ப்பு செயலியை பதிவிறக்கம் செய்து புகாரை பதிவு செய்யலாம் என்றாா்.