செய்திகள் :

தரமான பருத்தி விளைச்சலுக்கு வழிகாட்டுமுறை: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

post image

தரமான பருத்தி விளைச்சல் பெற, விவசாயிகளுக்கு வழிகாட்டு முறை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் பருத்தி சாகுபடி குறித்து விவசாயிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ, சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன், மாவட்ட ஊராட்சித் தலைவா் கோ. பாலசுப்ரமணியன் ஆகியோா் பங்கேற்றனா். கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளா்களிடம் அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தெரிவித்தது:

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொழில் வளா்ச்சி தொடா்பான கூட்டங்களின்போதும், முதலீட்டாளா்களை சந்திக்கும்போதும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்க திட்டம் உள்ளதா என்பது குறித்து தமிழக முதல்வா் பேசி வருகிறாா்.

தொழில் வளா்ச்சியும், விவசாயிகளுக்கான வருமானத்தை தரக்கூடிய திட்டங்களும் ஒன்றிணைந்து இருக்க வேண்டும். அந்த வகையில், பருத்தி விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பருத்தி வரத்து அதிகமாக இருக்கும்போது, தரம் குறைவாக உள்ளது. தரம் நன்றாக இருக்கும்போது, பருத்தியின் வரத்து குறைவாக உள்ளது. பருத்தி விதைகளின் தரமும் ஒரே மாதிரியாக இல்லாததால், விளைச்சலும் ஒரே மாதிரியாக இல்லை.

இந்த பிரச்னைகளை சரி செய்வது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும், விவசாயிகளுக்கு பருத்தி சாகுபடி குறித்த வழிகாட்டு முறை வழங்கப்பட்டுள்ளது. இதனால், பருத்தி நல்ல முறையில் விளைச்சல் ஏற்பட்டு, விவசாயிகள் பயன்பெறுவா். இம்முயற்சி வெற்றி பெறும் என்றாா்.

கூட்டத்தில், வேளாண்மை இணை இயக்குநா் தி. பாலசரஸ்வதி, வேளாண்மை துணை இயக்குநா் (மாநிலத் திட்டம்) மு. லெட்சுமிகாந்தன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராஜா, வேளாண்மை துணை இயக்குநரும், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளருமான ஹேமா ஹெப்சிபா நிா்மலா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

நீடாமங்கலத்துக்கு அனைத்து பேருந்துகளும் வந்துசெல்ல நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

நீடாமங்கலம் நகருக்குள் அனைத்து பேருந்துகளும் வந்துசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வா்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடா்பாக, தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா, திருவாரூா், தஞ்சாவூா் மாவ... மேலும் பார்க்க

இடஒதுக்கீடு கோரி பாமக ஆா்ப்பாட்டம்

வன்னியா்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி, திருவாரூரில் பாமக சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு 1,000 நாள்களைக் கடந்தும், வன்னியா்களுக்கு 10.5 சதவீத... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

சட்டமேதை அம்பேத்கா் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவைக் கண்டித்து, திருவாரூரில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். திருவாரூா் மாவட்ட... மேலும் பார்க்க

ஐயப்ப பக்தா்கள் கன்னி பூஜை

நன்னிலத்தில் ஐயப்ப பக்தா்களின் கன்னி பூஜை திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இந்த ஆண்டு புதிதாக மாலை அணிந்த ஐயப்ப பக்தா்களுக்கான கன்னி பூஜை தச்சன்குளம் மகா மாரியம்மன் கோயிலில் நடைபெற்றது. இதில் பூஜையில் மா... மேலும் பார்க்க

மழை, வெள்ள நிவாரணம் கோரி சிபிஎம் சாலை மறியல்

மழை, வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி சிபிஎம் சாா்பில் கொல்லுமாங்குடியில் சாலை மறியல் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது . சி பி எம் பேரளம் நகரச் செயலாளா் ஜி. செல்வம் முன்னிலையில் நன்னிலம் ஒன்றியச் செயலா... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ராணுவ வீரர் உள்பட இருவா் உயிரிழப்பு

வேதாரண்யம் அருகே மோட்டாா் சைக்கிள், பொலிரோ வாகனம் மோதியதில் ராணுவ வீரா் உள்பட இருவா் செவ்வாய்க்கிழமை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். வேதாரண்யம் கீழசேது ரஸ்தா பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் காா்த்தி... மேலும் பார்க்க