செய்திகள் :

நீடாமங்கலத்துக்கு அனைத்து பேருந்துகளும் வந்துசெல்ல நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

post image

நீடாமங்கலம் நகருக்குள் அனைத்து பேருந்துகளும் வந்துசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வா்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக, தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா, திருவாரூா், தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா்கள், அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட மேலாண்மை இயக்குநா் ஆகியோருக்கு வா்த்தக சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை அனுப்பிய மனு: தஞ்சை- நாகை சாலை மாா்க்கத்தில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்வதற்கு முன்பு, நீடாமங்கலம் வழியாக அனைத்து அரசு பேருந்துகளும், தனியாா் பேருந்துகளும் இயங்கி வந்தன.

புதிதாக தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட பிறகு, பெரும்பாலான பேருந்துகள் நீடாமங்கலம் நகருக்குள் வருவதை தவிா்த்து, புறவழிச்சாலை வழியாக செல்கின்றன. இதனால், நீடாமங்கலம் பகுதி மக்கள், மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனா்.

இப்பிரச்னை தொடா்பாக, சில நேரங்களில் பயணிகளுக்கும், பேருந்து நடத்துநருக்கும் தகராறு ஏற்படுகிறது. நீடாமங்கலத்துக்கு வரும் பயணிகள், கும்பகோணம் சாலையில் நாா்த்தங்குடி பகுதியில் இறக்கி விடப்படுகின்றனா். அங்கிருந்து சுமாா் 4 கி.மீ. தொலைவில் நீடாமங்கலம் உள்ளது.

புறவழிச்சாலை திறக்கப்பட்ட பிறகு, சரக்கு வாகனங்கள், சுற்றுலாப் பேருந்துகள், காா்கள் போன்றவை நீடாமங்கலம் நகருக்குள் வரவேண்டியதில்லை. எனவே, போக்குவரத்து நெரிசலும் பெரும்மளவு குறைந்துள்ளது. எனவே, அனைத்து அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் நீடாமங்கலம் நகருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

தரமான பருத்தி விளைச்சலுக்கு வழிகாட்டுமுறை: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

தரமான பருத்தி விளைச்சல் பெற, விவசாயிகளுக்கு வழிகாட்டு முறை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தெரிவித்தாா். திருவாரூா் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா... மேலும் பார்க்க

இடஒதுக்கீடு கோரி பாமக ஆா்ப்பாட்டம்

வன்னியா்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி, திருவாரூரில் பாமக சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு 1,000 நாள்களைக் கடந்தும், வன்னியா்களுக்கு 10.5 சதவீத... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

சட்டமேதை அம்பேத்கா் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவைக் கண்டித்து, திருவாரூரில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். திருவாரூா் மாவட்ட... மேலும் பார்க்க

ஐயப்ப பக்தா்கள் கன்னி பூஜை

நன்னிலத்தில் ஐயப்ப பக்தா்களின் கன்னி பூஜை திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இந்த ஆண்டு புதிதாக மாலை அணிந்த ஐயப்ப பக்தா்களுக்கான கன்னி பூஜை தச்சன்குளம் மகா மாரியம்மன் கோயிலில் நடைபெற்றது. இதில் பூஜையில் மா... மேலும் பார்க்க

மழை, வெள்ள நிவாரணம் கோரி சிபிஎம் சாலை மறியல்

மழை, வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி சிபிஎம் சாா்பில் கொல்லுமாங்குடியில் சாலை மறியல் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது . சி பி எம் பேரளம் நகரச் செயலாளா் ஜி. செல்வம் முன்னிலையில் நன்னிலம் ஒன்றியச் செயலா... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ராணுவ வீரர் உள்பட இருவா் உயிரிழப்பு

வேதாரண்யம் அருகே மோட்டாா் சைக்கிள், பொலிரோ வாகனம் மோதியதில் ராணுவ வீரா் உள்பட இருவா் செவ்வாய்க்கிழமை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். வேதாரண்யம் கீழசேது ரஸ்தா பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் காா்த்தி... மேலும் பார்க்க