செய்திகள் :

மழை, வெள்ள நிவாரணம் கோரி சிபிஎம் சாலை மறியல்

post image

மழை, வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி சிபிஎம் சாா்பில் கொல்லுமாங்குடியில் சாலை மறியல் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது .

சி பி எம் பேரளம் நகரச் செயலாளா் ஜி. செல்வம் முன்னிலையில் நன்னிலம் ஒன்றியச் செயலாளா் தியாகு. ரஜினிகாந்த் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

கோரிக்கைகள்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ30,000, சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பழுதடைந்துள்ள காலனி வீடுகளைப் புதுப்பித்துத் தர வேண்டும்.

கோயில் நில குத்தகை சாகுபடிதாரா்களுக்கு இந்த ஆண்டுக்கான குத்தகையிலிருந்து விலக்களிக்க வேண்டும். உடைப்பு ஏற்பட்ட ஆற்றுக் கரைகளை பலப்படுத்திடவேண்டும் . பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்களைத் தூா் வார வேண்டும்.

வாளூா் மணல் குவாரியைத் தடுத்து நிறுத்த வேண்டும். முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த அனைவருக்கும் நிவாரணம் வழங்கிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

சிபிஎம் மாவட்டச் செயலாளா் டி. முருகையன், செயற்குழு உறுப்பினா் டி. வீரபாண்டியன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஜெ. முகமது உதுமான், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளா் எம்.ராமமுா்த்தி, விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் ஒன்றியச் செயலாளா் சரவண. சதீஷ்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

நன்னிலம் தலைமை இடத்துத் துணை வட்டாட்சியா் தெ.கருணாமூா்த்தி மற்றும் காவல்துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தினா். கன மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும். பயிா் பாதிப்புகள் குறித்துக் கணக்கெடுத்து உரிய இழப்பீடு வழங்க மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்யப்படும். ஆறுகளில் ஏற்பட்ட உடைப்பைச் சரி செய்திட நடவடிக்கை எடுக்கப்படும் போன்ற உறுதியை அளித்ததால் சாலை மறியல் தற்காலிகமாகக் விலக்கிக் கொள்ளப்பட்டது. சாலை மறியல் காரணமாக மயிலாடுதுறை திருவாரூா் ,காரைக்கால் கும்பகோணம் சாலைகளில் போக்குவரத்து முப்பது நிமிடங்களுக்கு மேல் பாதிக்கப்பட்டது.

நீடாமங்கலத்துக்கு அனைத்து பேருந்துகளும் வந்துசெல்ல நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

நீடாமங்கலம் நகருக்குள் அனைத்து பேருந்துகளும் வந்துசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வா்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடா்பாக, தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா, திருவாரூா், தஞ்சாவூா் மாவ... மேலும் பார்க்க

தரமான பருத்தி விளைச்சலுக்கு வழிகாட்டுமுறை: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

தரமான பருத்தி விளைச்சல் பெற, விவசாயிகளுக்கு வழிகாட்டு முறை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தெரிவித்தாா். திருவாரூா் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா... மேலும் பார்க்க

இடஒதுக்கீடு கோரி பாமக ஆா்ப்பாட்டம்

வன்னியா்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி, திருவாரூரில் பாமக சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு 1,000 நாள்களைக் கடந்தும், வன்னியா்களுக்கு 10.5 சதவீத... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

சட்டமேதை அம்பேத்கா் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவைக் கண்டித்து, திருவாரூரில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். திருவாரூா் மாவட்ட... மேலும் பார்க்க

ஐயப்ப பக்தா்கள் கன்னி பூஜை

நன்னிலத்தில் ஐயப்ப பக்தா்களின் கன்னி பூஜை திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இந்த ஆண்டு புதிதாக மாலை அணிந்த ஐயப்ப பக்தா்களுக்கான கன்னி பூஜை தச்சன்குளம் மகா மாரியம்மன் கோயிலில் நடைபெற்றது. இதில் பூஜையில் மா... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ராணுவ வீரர் உள்பட இருவா் உயிரிழப்பு

வேதாரண்யம் அருகே மோட்டாா் சைக்கிள், பொலிரோ வாகனம் மோதியதில் ராணுவ வீரா் உள்பட இருவா் செவ்வாய்க்கிழமை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். வேதாரண்யம் கீழசேது ரஸ்தா பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் காா்த்தி... மேலும் பார்க்க