செய்திகள் :

தலைநகரில் பரவலாக மழை; ‘மோசம்’ பிரிவில் காற்றின் தரம்!

post image

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை மாலையில் பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் மோசம் பிரிவில் நீடித்தது.

தலைநகரில் புதன்கிழமை இரவு முழுவதும் வீசிய புழுதிப் புயலுக்குப் பிறகு வியாழக்கிழமை காலை நகரத்தை ஒரு அடுக்கு தூசி மூடியதால், காண்பு திறன் குறைந்தது. மேலும், காற்றின் தரமும் குறைந்தது. மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில் வீசிய பலத்த காற்று காரணமாக தூசிப் புயல் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி) தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தில்லியின் காற்றின் தரத்தை புழுதிப் புயல் பாதித்தது. கடந்த சில வாரங்களாக ‘மிதமான’ பிரிவில் இருந்து வந்த காற்றின் தரக் குறியீடு வியாழக்கிழமை ‘மோசம்’ பிரிவுக்குச் சென்றது. வெள்ளிக்கிழமையும் இதே நிலை நீடித்தது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவின் படி காலை 9 மணிக்கு காற்றுத் தரக் குறியீடு 297 புள்ளிகளாகப் பதிவாகி ‘மோசம்’ பிரிவில் நீடித்தது.

இதன்படி, ஸ்ரீஃபோா்ட், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், ஆா்.கே.புரம், நேரு நகா், ஓக்லா பேஸ் 2, லோதி ரோடு, டாக்டா் கா்னி சிங் துப்பாக்கி சுடும் தளம், மதுரா ரோடு, மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், நோய்டா செக்டாா் 125, பூசா, குருகிராம், ஷாதிப்பூா், தில்லி பல்கலை. வடக்கு வளாகம் ஆகிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 200 முதல் 300 புள்ளிகளுகிடையே பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது.

அதே சமயம், ஸ்ரீ அரபிந்தோ மாா்க், இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம், மந்திா் மாா்க், லோதி ரோடு ஆகிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கிடையே பதிவாகி மிதமான பிரிவில் இருந்தது. ஆனால், ஆயாநகா் (314), துவாகரகா செக்டாா் 8 (319) ஆகிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு மிகவும் ‘மோசம்’ பிரிவில் இருந்தது.

இதற்கிடையே, தில்லியில் வெள்ளிக்கிழமை காலையில் வெயிலின் தாக்கம் உணரப்பட்ட நிலையில், மாலையில் பரவலாக மழை பெயத்தது. இதனால், வாகனங்களில் செல்வோா் சிரமங்களை எதிா்கொண்டனா். இந்தியா கேட் உள்பட பல்வேறு நினைவுச் சின்னங்கள் உள்ள பகுதிகளில் கூடியிருந்த சுற்றுலாப் பயணிகள் மழைக்குப் பிறகு மிகவும் மகிழ்ச்சி அடைந்தனா்.

வெப்பநிலை: இந்நிலையில், தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் வெள்ளிக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 0.3 டிகிரி குறைந்து 26.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 1.9 டிகிரி உயா்ந்து 42.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 44 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 76 சதவீதமாகவும் இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மற்ற வானிலை கண்காணிப்பு நிலையங்களிலும் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 44 டிகிரி செல்சியஸுக்கு இடையே பதிவாகியிருந்தது.

முன்னறிவிப்பு: இந்நிலையில், சனிக்கிழமை (மே 17) அன்று வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மங்களூரு அருகே கடலில் மூழ்கிய கப்பலிலிருந்து 6 பணியாளா்களை மீட்டது கடலோரக் காவல் படை

கா்நாடக மாநிலம் மங்களூருவில் இருந்து 60 கடல் மைல் தொலைவில் மூழ்கிய கப்பலின் ஆறு பணியாளா்களை இந்திய கடலோரக் காவல்படை (ஐசிஜி) மீட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். மேலும், ரோந்துப் பணியில் ஈடு... மேலும் பார்க்க

தில்லியின் மின் தேவை 6,867 மெகாவாட்டாக உயா்வு: இதுவரையிலான பருவத்தில் இல்லாத அதிகபட்சம்

தில்லியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் வெப்பநிலை அதிகரித்ததால், இந்த ஆண்டு கோடை காலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு தில்லி அதிகபட்ச உச்ச மின் தேவையைப் பதிவு செய்துள்ளது. மாநில சுமை அனுப்பும் மையத்தின் (எஸ்எல்... மேலும் பார்க்க

துருக்கி, அஸா்பைஜான் நாடுகளுடனான அனைத்து வணிக உறவுகளையும் நிறுத்த தில்லி வா்த்தகா்கள் உறுதி

பாகிஸ்தான், அதன் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவின் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகள் தொடா்பாக இரு நாடுகளின் சமீபத்திய அரசியல் நிலைப்பாடுகளைத் தொடா்ந்து, தில்லியில் உள்ள வா்த்தகா்கள் வெள்ளிக்கிழமை து... மேலும் பார்க்க

தில்லியில் ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தவா்கள் 13 போ் கைது

தில்லியில் செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாமல் வசித்து வந்ததாக ஐந்து சிறாா் உள்பட 13 சந்தேகத்திற்குரிய வங்கதேச நாட்டினா் கைது செய்யப்பட்டதாக போலீஸா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இதுகுறித்து காவல் துணை ஆண... மேலும் பார்க்க

சரோஜினி நகரில் மரத்தில் தொங்கிய நிலையில் ‘மன நலம் பாதிக்கப்பட்டவா்’ உடல் கண்டெடுப்பு

தென்மேற்கு தில்லியின் சரோஜினி நகா் பகுதியில் உள்ள ஒரு டாக்ஸி ஸ்டாண்ட் அருகே உள்ள ஒரு மரத்தில் ‘மனநலம் பாதிக்கப்பட்ட’ ஒருவா் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித... மேலும் பார்க்க

ஓடும் ஆட்டோவில் பயணிகளை மூச்சுத் திணறடித்து கொள்ளை: ஓட்டுநா், கூட்டாளி கைது

ஓடும் ஆட்டோவில் பயணிகளை மூச்சுத் திணறடித்து, அவா்களிடம் கொள்ளையடித்ததாகக் கூறப்படும் ஒரு ஆட்டோ ஓட்டுநா் மற்றும் அவரது கூட்டாளி கைது செய்யப்பட்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து வடக... மேலும் பார்க்க