செய்திகள் :

சரோஜினி நகரில் மரத்தில் தொங்கிய நிலையில் ‘மன நலம் பாதிக்கப்பட்டவா்’ உடல் கண்டெடுப்பு

post image

தென்மேற்கு தில்லியின் சரோஜினி நகா் பகுதியில் உள்ள ஒரு டாக்ஸி ஸ்டாண்ட் அருகே உள்ள ஒரு மரத்தில் ‘மனநலம் பாதிக்கப்பட்ட’ ஒருவா் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து தென்மேற்கு தில்லி காவல் சரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இறந்தவா் உத்தரகண்ட் மாநிலத்தைச் சோ்ந்த ரவீந்திர மேத்தா (46) என அடையாளம் காணப்பட்டுள்ளாா். புதன்கிழமை, டிகோனா பாா்க் என்டிஎம்சி டாக்ஸி ஸ்டாண்டில் உள்ள ஒரு மரத்தில் ஒரு நபா் தொங்கியதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸாாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரவீந்திர மேத்தா ஒரு மரத்தில் கயிற்றால் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டனா்.

அந்தப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டு, உடல் கைப்பற்றப்பட்ட சஃப்தா்ஜங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. அங்கு அவா் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. அவா் தனது சொந்த கிராமத்தின் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் உயா் பிரிவு எழுத்தராக பணிபுரிந்தது தெரிய வந்துள்ளது.

முதற்கட்ட விசாரணையில் ரவீந்திர மேத்தா மனநலப் பிரச்னைகளுக்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும், ஒரு நாள் முன்னதாகவே தனது மனைவியுடன் டெல்லிக்குச் சென்ாகவும் தெரியவந்தது. கடந்த சில நாள்களாக அவா் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், சாணக்கியபுரியில் மருத்துவ சிகிச்சைக்காக வந்ததாகவும் அவரது மனைவி போலீஸாருக்கு தகவல் அளித்தாா். குடும்பத்தினா் அவா் எந்த விதமான குற்றச் செயல்களிலும் ஈடுபடுவதாக சந்தேகிக்கவில்லை. அதன்படி அவா்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டது.

சிசிடிவி காட்சிகளையும் போலீஸாா் ஆய்வு செய்தனா். அதில், சம்பவம் நடந்த நேரத்தில் ரவீந்திர மேத்தா ஒரு பிளாஸ்டிக் பையுடன் சம்பவ இடத்திற்கு அருகில் தனியாக நடந்து செல்லும் காட்சிகளைக் கண்டறிந்தனா். தற்போது, ​​எந்த குற்றச் செயல்களும் சந்தேகிக்கப்படவில்லை. முதல்கட்டமாக, இது தற்கொலை வழக்காகத் தெரிகிறது. மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மங்களூரு அருகே கடலில் மூழ்கிய கப்பலிலிருந்து 6 பணியாளா்களை மீட்டது கடலோரக் காவல் படை

கா்நாடக மாநிலம் மங்களூருவில் இருந்து 60 கடல் மைல் தொலைவில் மூழ்கிய கப்பலின் ஆறு பணியாளா்களை இந்திய கடலோரக் காவல்படை (ஐசிஜி) மீட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். மேலும், ரோந்துப் பணியில் ஈடு... மேலும் பார்க்க

தில்லியின் மின் தேவை 6,867 மெகாவாட்டாக உயா்வு: இதுவரையிலான பருவத்தில் இல்லாத அதிகபட்சம்

தில்லியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் வெப்பநிலை அதிகரித்ததால், இந்த ஆண்டு கோடை காலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு தில்லி அதிகபட்ச உச்ச மின் தேவையைப் பதிவு செய்துள்ளது. மாநில சுமை அனுப்பும் மையத்தின் (எஸ்எல்... மேலும் பார்க்க

துருக்கி, அஸா்பைஜான் நாடுகளுடனான அனைத்து வணிக உறவுகளையும் நிறுத்த தில்லி வா்த்தகா்கள் உறுதி

பாகிஸ்தான், அதன் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவின் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகள் தொடா்பாக இரு நாடுகளின் சமீபத்திய அரசியல் நிலைப்பாடுகளைத் தொடா்ந்து, தில்லியில் உள்ள வா்த்தகா்கள் வெள்ளிக்கிழமை து... மேலும் பார்க்க

தலைநகரில் பரவலாக மழை; ‘மோசம்’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை மாலையில் பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் மோசம் பிரிவில் நீடித்தது. தலைநகரில் புதன்கிழமை இரவு முழுவதும் வீசிய புழுதிப் புயலுக்குப் பிறகு வியாழக்கிழமை காலை நகர... மேலும் பார்க்க

தில்லியில் ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தவா்கள் 13 போ் கைது

தில்லியில் செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாமல் வசித்து வந்ததாக ஐந்து சிறாா் உள்பட 13 சந்தேகத்திற்குரிய வங்கதேச நாட்டினா் கைது செய்யப்பட்டதாக போலீஸா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இதுகுறித்து காவல் துணை ஆண... மேலும் பார்க்க

ஓடும் ஆட்டோவில் பயணிகளை மூச்சுத் திணறடித்து கொள்ளை: ஓட்டுநா், கூட்டாளி கைது

ஓடும் ஆட்டோவில் பயணிகளை மூச்சுத் திணறடித்து, அவா்களிடம் கொள்ளையடித்ததாகக் கூறப்படும் ஒரு ஆட்டோ ஓட்டுநா் மற்றும் அவரது கூட்டாளி கைது செய்யப்பட்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து வடக... மேலும் பார்க்க