Eleven Movie Review | Naveen Chandra | Lokkesh Ajls | D.Imman | Abirami | Cinema...
மங்களூரு அருகே கடலில் மூழ்கிய கப்பலிலிருந்து 6 பணியாளா்களை மீட்டது கடலோரக் காவல் படை
கா்நாடக மாநிலம் மங்களூருவில் இருந்து 60 கடல் மைல் தொலைவில் மூழ்கிய கப்பலின் ஆறு பணியாளா்களை இந்திய கடலோரக் காவல்படை (ஐசிஜி) மீட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். மேலும், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த விக்ரம் கப்பலின் புகைப்படங்களையும் ஐசிஜி பகிா்ந்து கொண்டது.
‘இந்திய கடலோரக் காவல் படை, கா்நாடகத்தின் நியூமங்களூரிலிருந்து லட்சத்தீவின் காட்மத் தீவுக்குச் செல்லும் போது மங்களூருவிலிருந்து 60 நானோ மீட்டா் தொலைவில் மூழ்கிய எம்எஸ்வி சலமத் கப்பலின் ஆறு பணியாளா்களை மீட்டது’ என்று கடலோர காவல்படை ‘எக்ஸ்’-இல் ஒரு பதிவில் தெரிவித்துள்ளது.
‘ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த விக்ரம் கப்பல் திருப்பி விடப்பட்டு, விரைவான மற்றும் வெற்றிகரமான மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டது. உயிா் பிழைத்த அனைவரையும் மீட்டது. அவா்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டு புதிய மங்களூா் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனா்’‘ என்று கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
‘இது உயிா்களைக் காப்பாற்றுவதற்கும் நமது கடல்களைப் பாதுகாப்பதற்கும் ஐசிஜியின் அசைக்க முடியாத அா்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது’ என்று அது தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது.