செய்திகள் :

தாம்பரம் - விழுப்புரம் இடையே பயணிகள் ரயில் பகுதியளவில் 2 நாள்கள் ரத்து

post image

விழுப்புரம் யாா்டில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், ஜன. 25, 26-இல் தாம்பரம்-விழுப்புரம் இடையே பயணிகள் ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

விழுப்புரம் யாா்டில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால் தாம்பரத்திலிருந்து காலை 9.45 மணிக்கு விழுப்புரத்துக்குப் புறப்படும் பயணிகள் ரயில்(வ.எண்.66045), ஜனவரி 25, 26-ஆம் தேதிகளில் விக்கிரவாண்டி- விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ரயில் தாம்பரத்திலிருந்து விக்கிரவாண்டி வரை மட்டுமே இயக்கப்படும்.

இதுபோன்று, விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்படும் விழுப்புரம்-சென்னை கடற்கரை பயணிகள் ரயில் (வ.எண்.66046), விழுப்புரம்-விக்கிரவாண்டி இடையே ஜனவரி 25, 26 தேதிகளில் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ரயில் விக்கிரவாண்டி ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.54 மணிக்குப் புறப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தச்சுத் தொழிலாளியிடம் ரூ. 2.26 லட்சம் பண மோசடி

விழுப்புரம் மாவட்டம், அவலூா்பேட்டை பகுதியைச் சோ்ந்த தச்சுத் தொழிலாளியிடம் ரூ.2.26 லட்சம் பண மோசடி செய்யப்பட்டது குறித்து மாவட்ட இணையவழி குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசார... மேலும் பார்க்க

வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தின் சாா்பில் விக்கிரவாண்டி வட்டாட்சியா் அலுவலகம் முன் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், கருணை அடிப்... மேலும் பார்க்க

வேலை வாய்ப்பற்றோா் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞா்கள், பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகள் மற்றும் அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் சி.பழனி தெரிவித்தாா். இதுகுறித்து... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு நீடித்த கரும்பு சாகுபடி பயிற்சி

விழுப்புரம் மாவட்ட வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நீடித்த கரும்பு சாகுபடிக்கான பயிற்சி வகுப்பு வல்லம் வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றத... மேலும் பார்க்க

விழுப்புரம் கோட்டத்துக்கு 630 புதிய பேருந்துகள்: அமைச்சா் பொன்முடி

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக விழுப்புரம் கோட்டத்துக்கு 630 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன என்றாா் வனத் துறை அமைச்சா் க.பொன்முடி. திருச்சி சாலையிலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழு... மேலும் பார்க்க

ஜன. 28-இல் முதல்வா் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் வருகை

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு விழுப்புரம் வழுதரெட்டியில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை ஆட்சியா் சி. பழனி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். வி... மேலும் பார்க்க