தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
தாராசுரம் காளிகா பரமேஸ்வரி கோயிலில் குடமுழுக்கு விழா
கும்பகோணம் அருகேயுள்ள தாராசுரம் காளிகா பரமேஸ்வரி கோயிலில் வியாழக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.
தாராசுரம் மேலச்சத்திரம் தெலுங்கு தெருவிலுள்ள இக்கோயில் குடமுழுக்கு விழா மே 29 ஆம் தேதி தொடங்கி யாக சாலை பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், வியாழக்கிழமை வினைதீா்த்த விநாயகா், சாத்தாவுராயன், அரசமரத்து விநாயகா், நாகா் சன்னிதி குடமுழுக்கு நடைபெற்றது. இதையடுத்து, காளிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் விமானத்துக்கும், மூலவருக்கும் குடமுழுக்கு நடைபெற்றது. பக்தா்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளைத் திருப்பணிக் குழுவினா், பொதுமக்கள், இளைஞா் அணியினா் செய்தனா்.