செய்திகள் :

தினப்பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

post image

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.

Dinapalan - 25.01.2025

மேஷம்

இன்று வாய்ப்புக்கள் தேடிவந்து கதவைத் தட்டும். சேமிப்புகள் பெருகும். அம்மன் வழிபாடு செய்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டிவரும். மனைவி, பிள்ளைகளாலும் மருத்துவச்செலவுகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

ரிஷபம்

இன்று கணவன்-மனைவி இடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். பொருளாதாரநிலையிலும் பற்றாக்குறைகள் நிலவுவதால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரித்து லாபங்கள் தடைப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

மிதுனம்

இன்று உங்களின் பலம் குறைந்து எதிரிகளின் பலம் அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சரளநிலை இருந்தாலும் கொடுத்த கடன்களை வசூலிப்பதில் தடைகள் ஏற்படும். பெண்கள் பிறரிடம் எந்தப்பொருளையும் இரவல் வாங்குவதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

கடகம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்குக் கௌரவமான பதவிகள் கிடைக்கும் என்றாலும் கூடுதல் பொறுப்புகளும் அதிகரிக்கும். எதிர்பார்த்துக் காத்திருந்த வாய்ப்புகள் கைநழுவிப்போகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும் என்பதால் தவிர்த்துவிடுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

சிம்மம்

இன்று எதிர்பாராத வீண்விரயங்கள் அதிகரிக்கும். உடல்நலனில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியிருக்கும். மனைவி, பிள்ளைகளால் மனக்குழப்பங்கள் உண்டாகும். பணவரவுகளில் தடைகள் நிலவுவதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்யவே திண்டாட வேண்டிவரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

கன்னி

இன்று கடன் பிரச்சினைகள் மேலோங்கி சேமிப்புக் குறையும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் இழுபறியான நிலையே நீடிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கக்கூடும். நெருங்கியவர்களே எதிரிகளாக மாறுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

துலாம்

இன்று கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்பதால் வீண் பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். கூட்டுத்தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளால் அனுகூலமற்ற பலனை சந்திப்பார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்குத் தகுதிக்குக் குறைவான பணியே அமையும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

விருச்சிகம்

இன்று வாய்ப்புகளை நழுவ விடாமல் பாதுகாத்துக்கொள்வது உத்தமம். மாணவர்கள் எதிலும் சுறு சுறுப்பு இல்லாது இருப்பார்கள். பணம் பலவழிகளில் தேடிவந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1, 6

தனுசு

இன்று சுபகாரியங்கள் கைகூடும். சிலருக்கு வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கக்கூடிய யோகங்களும் உண்டாகும். கணவன்-மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார்-உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக அமையும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5, 6

மகரம்

இன்று புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் கடனுதவிகள் கிடைக்கப்பெறும் என்றாலும் எதிலும் சற்று நிதானமாக செயல்படுவது நல்லது. கொடுக்கல்-வாங்கல் சரளமாக அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத உயர்வுகளும் கிடைக்கப்பெறும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4, 6

கும்பம்

இன்று உடல்நிலை சற்றே சோர்வாக அமையும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும். புத்திரவழியில் சில மனசஞ்சலங்கள் தோன்றும். நெருங்கியவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 2, 9

மீனம்

இன்று இன்பமும் துன்பமும் கலந்தே இருக்கும். கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. எதிரிகளின் பலம் குறைந்து உங்களின் பலம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் சில தடைகள் நிலவினாலும் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1, 5

மிஷ்கினை ஆள்வைத்து மிரட்டிய பிரபல தொலைக்காட்சி நிறுவனம்!

பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஆள் வைத்து மிரட்டி தன் படத்தின் உரிமத்தைப் பெற்றதாக இயக்குநர் மிஷ்கின் குற்றம்சாட்டியுள்ளார். இயக்குநர் வெற்றி மாறன் தயாரித்த பேட் கேர்ள் படத்தின் டீசர் வெளியீட்டு நிகழ்வு ... மேலும் பார்க்க

சர்ச்சை பேச்சு... மன்னிப்பு கேட்ட மிஷ்கின்!

இயக்குநர் மிஷ்கின் தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.பாட்டல் ராதா டிரைலர் வெளியீட்டு விழாவில் மதுப்பழக்கத்தின் அடிமைத்தனம் மற்றும் தீங்கைக் குறித்து பலர் பேசினர். ஆனால், இயக்குநர் மிஷ்கின் மத... மேலும் பார்க்க

வெற்றி மாறன் தயாரித்த ‘பேட் கேர்ள்’ படத்தின் டீசர்!

இயக்குநர் வெற்றி மாறன் தயாரித்த பேட் கேர்ள் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இயக்குநர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவான திரைப்படம் ப... மேலும் பார்க்க

தினப்பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.26.01.2025மேஷம்இன்று கொடுக்கல்-வாங்கலில் நிதானமாக செயல்பட்டால் ஓரளவுக்கு லாபம் அடையமு... மேலும் பார்க்க

முதல் கிராண்ட்ஸ்லாம் வென்றாா் மேடிசன் கீஸ்: சபலென்காவை சாய்த்து ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் ஆனாா்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவில், அமெரிக்காவின் மேடிசன் கீஸ் (29) சாம்பியன் ஆனாா். இறுதிச்சுற்றில் அவா், நடப்பு சாம்பியனாக இருந்த பெலாரஸின் அரினா சபலென்காவை 6-3, 2-6, 7-5 எ... மேலும் பார்க்க

விஜய் சங்கா் 150*; வெற்றியை நெருங்கும் தமிழ்நாடு

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் சண்டீகருக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி வெற்றியை நெருங்கியிருக்கிறது. 403 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடும் சண்டீகா், 5 விக்கெட்டுகளைக் கொண்டு 290 ரன்கள் எடுக்... மேலும் பார்க்க