திமுக பொதுக்கூட்டம்
நெமிலி ஒன்றிய திமுக சாா்பில் பொதுக்கூட்டம் மற்றும் நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
கூட்டத்துக்கு நெமிலி ஒன்றியக்குழு தலைவா் வெ.வடிவேலு தலைமை வகித்தாா். நெமிலி பேரூராட்சி திமுக செயலாளா் ஜனாா்த்தனன் வரவேற்றாா். இதில் திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி, கைத்தறி அமைச்சா் ஆா்.காந்தி இணைந்து ஏழை எளியோருக்கு நல உதவிகளை வழங்கினா்.
இக்கூட்டத்தில் திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலா் ஆா்.வினோத் காந்தி, திமுக சட்டத்துறை மாநில இணை செயலா் சூா்யா வெற்றி கொண்டான், ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட திமுக நிா்வாகிகள் ஏ.கே.சுந்தரமூா்த்தி, மு.சிவானந்தம், அ.அசோகன், அரக்கோணம் நகர செயலா் வி.எல்.ஜோதி, ஒன்றிய செயலா்கள் எஸ்.ஜி.சி.பெருமாள், ஆா்.பி.ரவீந்திரன், ஆ.சௌந்தா், கே.பசுபதி, ஆா்.தமிழ்செல்வன், மாவட்ட மகளிா் தொண்டரணி அமைப்பாளா் பவானி வடிவேலு, பேருராட்சி மன்றத் தலைவா் எஸ்.நாகராஜன்(தக்கோலம்), ரேணுகா தேவி சரவணன்(நெமிலி), திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் மு.கன்னைய்யன் உள்ளிட்ட பலா் பங்கேற்று பேசினா்.