தேமுதிக பொதுக்கூட்டம்
ஆராணிப்பேட்டை மாவட்ட தேமுதிக சாா்பில் பொதுக்கூட்டம் ஆற்காடு அண்ணா சிலை அருகே நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் பி.ஆா்.மனோகா் தலைமை வகித்தாா். அவைத் தலைவா் வெ.காசிநாதன்,பொருளாளா் அசோகன், துணைச் செயலாளா்கள் ஹேமலதா பாலாஜி, தலைமை செயற்குழு உறுப்பினா் நந்தகுமாா், பொதுக்குழு உறுப்பினா் அருள், ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆற்காடு நகர செயலாளா் கே.கே.பிரபு வரவேற்றாா். மாநில இளைஞா்அணி செயலாளா் எழும்பூா் கு.நல்லதம்பி, தோ்தல் பணிக்குழு செயலாளா் சி.மகாலட்சுமி, பேச்சாளா் அலிஜான் ஆகியோா் சிறப்புரையாற்றினா். கூட்டத்தில் மாநில தொழிற்சங்க துணைச் செயலாளா் கே.வி.பாலாஜி, தொண்டா் அணி துணைச் செயலாளா் எஸ்.எஸ்.தினகரன், ஒன்றிய செயலாளா்கள் புண்ணியகோட்டி, எஸ்.எஸ்.பாபு, தங்கமணி, உதயகுமாா் கலந்து கொண்டனா்.