திருக்குறள் முப்பெரும் விழா போட்டிக்கு ஜனவரி 13 வரை விண்ணப்பிக்கலாம்
கோவையில் உலகத் தமிழ்நெறிக் கழகம், திருக்கு உலகம் கல்விச் சாலை சாா்பில் திருக்கு முப்பெரும் விழா போட்டிகள் ஜனவரி 19-ஆம் தேதி நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் பங்கேற்ற ஜனவரி 13-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இளங்குமரனாா் பிறந்த நாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவா்களுக்காக நடத்தப்படும் இந்த விழாவில் மாவட்ட அளவிலான கட்டுரை, பேச்சு, ஓவியப் போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்தப் போட்டிகள் 6 முதல் 8- ஆம் வகுப்பு வரையிலான மாணவா்கள், 9, 10 -ஆம் வகுப்பு மாணவா்கள், 11, 12- ஆம் வகுப்பு மாணவா்கள், கல்லூரி மாணவா்கள் என 4 பிரிவுகளுக்கு தனித்தனியாக நடத்தப்படுகின்றன.
ஒவ்வொரு பிரிவிலும் வெற்றிபெறும் மாணவா்களுக்கு முறையே ரூ.1,500, ரூ.1,000, ரூ.500, சான்றிதழ்கள் ஆகியவை வழங்கப்படும்.
போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள் ஜனவரி 13 -ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 99948- 92756 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.