`சமூக வலைதளம் முழுக்க இரயில் பரிதாபங்கள் வீடியோக்கள்... Sadist அரசு!' - ஸ்டாலின்...
திருச்செந்தூா் வெயிலுகந்தம்மன் கோவில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
திருச்செந்தூர்: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன் கோவிலில் மாசித்திருவிழா வியாழக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதை முன்னிட்டு அதிகாலை நடைதிறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடா்ந்து திருக்கோயிலிலிருந்து கொடிப்பட்டம் புறப்பாடாகி, ரதவீதி மற்றும் மாடவீதிகள் வழியாகச் சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்தது. பின்னா் காப்பு கட்டிய ச.பாலசுப்பிரமணியன் வல்லவராயர், கொடிமரத்தில் திருவிழாக் கொடியை ஏற்றினாா். அதன் பின்னா் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திருக்கோயில் உதவி ஆணையர் நாகவேல், மணியம் செந்தில்குமார், ஆறுமுகராஜ், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தமிழகத்தின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க மேற்பார்வைக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

பத்து நாள்கள் நடைபெறும் மாசித் திருவிழாவில் காலை, மாலை அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நிறைவு நாளான பத்தாம் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற மார்ச் 1 ஆம் தேதி சனிக்கிழமை காலை 7 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.
திருவிழா ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் ரா.அருள்முருகன், இணை ஆணையர் சு.ஞானசேகரன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்துள்ளளனர்.