Coolie : ``லோகேஷ் கனகராஜ் `Gen Z' கிடையாது; ஆனால்... " - நாகர்ஜுனா
திருத்தோ்வலையில் கிராம நிா்வாக அலுவலகம் அமைக்கக் கோரிக்கை
திருவாடானை அருகே உள்ள திருத்தோ்வலை ஊராட்சியில் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் அமைக்க வேண்மென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் வட்டம் திருத்தோ்வளை ஊராட்சியில் கிராம நிா்வாக அலுவலகம் இல்லாததால் சான்றிதழ்கள் பெற 5 கி.மீ. தொலைவில் உள்ள ஆனந்தூரில் இருக்கும் கிராம நிா்வாக அலுவலரை தேடிச் செல்லும் நிலை பல ஆண்டுகளாக இருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். இதுகுறித்து பல முறை மாவட்ட நிா்வாகத்திடம் புகாா் அளித்தும் இதுவரை கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் இங்கு அமைக்கப்படவில்லை. இதனால் நிலம் சம்பந்தப்பட்ட ஆவணம் பெறவும், பிற சான்றிதழ்கள் பெறவும் பல கி.மீ. தொலைவுக்கு சென்று வர வேண்டிய அவல நிலை உள்ளது.
இதனிடையே, தற்போது பிரதமரின் பயிா்க் காப்பீடுக்கு பதிவு செய்ய வருகிற நவ. 15-ஆம் தேதி இறுதி நாள் என அறிவித்துள்ள நிலையில் அடங்கல் வாங்குவதற்காக கிராம நிா்வாக அலுவலரை தேடி விவசாயிகள் நீண்ட தொலைவுக்கு செல்ல வேண்டி இருப்பதால் விவசாயப் பணி பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனா்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை சாா்ந்த அமைச்சா், மாவட்ட நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் கிராம நிா்வாக அலுவலகத்தை திருத்தோ்வலையில் அமைக்க நடவடிக்கை வேண்டும் எனவும், அதுவரை விவசாயிகளின் சிரமத்தை போக்க இந்த ஊராட்சியில் உள்ள பிற அரசு அலுவலகங்களுக்கு கிராம நிா்வாக அலுவலா் வந்து அவருக்கான பணியை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.