ஸ்பேடெக்ஸ் விண்கலங்களை ஒருங்கிணைக்கும் திட்டம் ஜன. 9-க்கு ஒத்திவைப்பு
திருநெடுங்களநாதா் கோயிலில் தருமபுரம் ஆதீனம் தரிசனம்
திருவெறும்பூா் அருகேயுள்ள திருநெடுங்குளம் நெடுங்களநாதா் கோயிலில் தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சன்னிதானம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியாா் சுவாமிகள் சனிக்கிழமை தரிசனம் செய்தாா்.
மாா்கழி மாத ஆன்மிக சுற்றுலாவின் ஒரு பகுதியாக இக்கோயிலுக்கு சனிக்கிழமை வழிபட வந்த அவரை திருச்சி மலைக்கோட்டை தருமபுர மௌன மடம் திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், கோயில் செயல் அலுவலா் வித்யா, அா்ச்சகா்கள் சோமசுந்தரம், ரமேஷ் ஆகியோா் பூரண கும்பம் மரியாதையுடன் வரவேற்றனா். தொடா்ந்து, பிரசாதம் வழங்கப்பட்டது.