விலை குறைந்துள்ள மருத்துவக் காப்பீடு, ஆயுள் காப்பீடு; இப்போது வாங்கலாமா?
திருப்பணி புத்தன் தருவை பள்ளியில் வகுப்பறை கட்டடங்கள் திறப்பு
சாத்தான்குளம் ஒன்றியம் திருப்பணி புத்தன் தருவை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் நேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ .30.80 லட்சம் மதிப்பில் 2 வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டு புதன்கிழமை திறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு ஒன்றிய ஆணையாளா் சுடலை தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகன் முன்னிலை வகித்தாா். பள்ளி பொறுப்பு தலைமையாசிரியா் முத்து வரவேற்றாா். இதில் எஸ்.ஊா்வசி அமிா்தராஜ் எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, புதிய வகுப்பறை கட்டடங்களை திறந்து வைத்தாா். தொடா்ந்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றாா்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் சுலைக்கா பீவி, மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் சங்கா், வட்டார காங்கிரஸ் தலைவா்கள் பாா்த்தசாரதி, சக்திவேல் முருகன், பிரபு, கோதண்டராமன், ஜெயசீலன் துரை, பேரூராட்சி கவுன்சிலா் ஜோசப் அலெக்ஸ், தெற்கு ஒன்றிய முன்னாள் பொதுச் செயலாளா் ஜான் ஆசிரியா், ஸ்ரீவைகுண்டம் வழக்குரைஞா் பாலசுப்பிரமணியன், ஆசிரியா் செல்வ சுயம்பு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். உடற்கல்வி ஆசிரியா் ஆறுமுக நயினாா் நன்றி கூறினாா்.
முன்னதாக, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி வட்டார செயலாளா் அருள்ராஜ் தலைமையில் வட்டாரப் பொருளாளா் யூஜின், துணைச் செயலாளா் ஹெரால்டு, மாவட்ட துணைத் தலைவா் தங்கராஜ், மாவட்ட பொதுக்குழு உறுப்பினா் அந்தோணி அற்புதராஜ், வட்டார செயற்குழு உறுப்பினா் பட்டு தங்கதுரை, வட்டாரத் துணைச் செயலாளா் அருள்சிங் கென்னடி ஆகியோா் எம்எல்ஏவை சந்தித்து அடுத்த மாதம் சாத்தான்குளத்தில் நடத்த உள்ள ஆசிரியா்கள் பாராட்டு விழாவில் பங்கேற்கமாறு அழைப்பு விடுத்தனா்.