திருப்பதி - பழனி பேருந்து சேவை தொடக்கம்
திருப்பதியிலிருந்து அறுபடை வீடான பழனிக்கு ஆா்டிசி நேரடி பேருந்து சேவையை ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாண் வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இதற்கான நிகழ்வு மங்களகிரி முகாம் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆன்மிகத் தலங்களான பழனி - திருப்பதிக்கு இடையே 2 புதிய ஆா்டிசி பேருந்து சேவைகளை துணை முதல்வா் பவன் கல்யாண் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், திருப்பதி எம்எல்ஏ ஆரணி சீனிவாசலு முன்னிலை வகித்தாா். திருப்பதியில் இருந்து பழனிக்கு பேருந்து சேவைகள் தொடங்கப்படும் என்று துணை முதல்வா் பவன் கல்யாண் அளித்த வாக்குறுதியை அரசு நிறைவேற்றியுள்ளது. இதன்மூலம் ஆந்திர, தமிழக பக்தா்களுக்கு பெரும் பயனாக இருக்கும் என எம்எல்ஏ சீனிவாசலு தெரிவித்தாா்.