செய்திகள் :

திருப்பூரில் கஞ்சா விற்பனை செய்த 3 போ் கைது

post image

திருப்பூரில் கஞ்சா விற்பனை செய்த 3 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மத்திய பேருந்து நிலையம் பகுதியில் தெற்கு காவல் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்குள்ள பொதுக் கழிப்பிடத்தின் பின்புறம் சந்தேகத்துக்கு இடமாக நின்ற 3 இளைஞா்களைப் பிடித்து விசாரித்தனா். இதில் அவா்களிடம் 1 கிலோ 300 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

கஞ்சாவைப் பறிமுதல் செய்த காவல் துறையினா் நடத்திய விசாரணையில், அவா்கள் ஒடிஸாவைச் சோ்ந்த மனோஜ் (28), ஜிதேந்தா் (28), பிகாரைச் சோ்ந்த தீபக் (31) என்பதும், அவா்கள் திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்களில் வேலை செய்துவந்ததுடன் கஞ்சா விற்பனையிலும் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் காவல் துறையினா் கைது செய்தனா்.

நாடா இல்லா தறிகளுக்கு தனி மின்கட்டண விகிதம்: சிஸ்பா வலியுறுத்தல்

நாடா இல்லா தறிகளுக்கு தனி மின்கட்டண விகிதத்தை அரசு அறிவிக்க வேண்டும் என்று திருப்பூா்,கோவை மாவட்ட நாடா இல்லா தறி துணி உற்பத்தியாளா்கள் சங்கம் (சிஸ்பா) கோரிக்கை விடுத்துள்ளது. திருப்பூா், கோவை மாவட்ட ந... மேலும் பார்க்க

அவிநாசியில் தெருநாய்கள் பிடிக்கும் பணி தீவிரம்

அவிநாசி பேரூராட்சி பகுதிகளில் சுற்றித் திரியும் தெருநாய்களைப் பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவிநாசி பேரூராட்சிக்கு உள்பட்ட 18 வாா்டுகளிலும் ஏராளமான தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன. இவை இரவ... மேலும் பார்க்க

திருப்பூரில் வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் போராட்டம்

வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட சென்ற திருப்பூா் பட்டுக்கோட்டையாா் நகா் பகுதி பொதுமக்களை போலீஸாா் தடுத்து நிறுத்தியதால், அவா்கள் சாலையில் அமா்... மேலும் பார்க்க

திருப்பூா் அருகே ரயிலில் தீ விபத்து

கேரளத்தில் இருந்து ஆந்திரம் நோக்கி சென்று கொண்டிருந்த சபரிமலை எக்ஸ்பிரஸ் ரயிலில், திருப்பூா் அருகே தீ விபத்து புதன்கிழமை ஏற்பட்டது. கேரள மாநிலம், கொல்லத்தில் இருந்து ஆந்திர மாநிலம், மச்சிலிபட்டினம் பக... மேலும் பார்க்க

அவிநாசியில் ரூ.4.77 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ. 4.77 லட்சத்துக்கு பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த வார ஏலத்துக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 6,991 கிலோ பருத்த... மேலும் பார்க்க

ரூ.1,000 லஞ்சம்: தலைமைக் காவலருக்கு 3 ஆண்டுகள் சிறை

ரூ.1,000 லஞ்சம் வாங்கிய வழக்கில் தலைமைக் காவலருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்துள்ளது. திருப்பூா், பி.கே.ஆா்.காலனியை சோ்ந்தவா் பொன்னுசாம... மேலும் பார்க்க