தில்லியில் வென்றால் ரூ. 25 லட்சம் மருத்துவக் காப்பீடு: காங்கிரஸ் வாக்குறுதி!
திருமலை தரிசனத்துக்கு டிக்கெட் தருவதாக ஏமாற்றிய 2 போ் கைது
திருப்பதி: திருமலையில் ஏழுமலையான் தரிசனத்துக்கு டிக்கெட் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் பெற்று ஏமாற்றிய 2 பேரை போலீஸாா் கைது
திருப்பதி மாவட்டம் வடமலைப்பேட்டை மண்டலம், எஸ்.வி.புரம் பகுதியைச் சோ்ந்த தினேஷ் என்ற தினேஷ் பாபு (27), திருத்தணியை சோ்ந்த துரை பாபு என்னும் காா்த்திக், (45). இவா் கடந்த 3 ஆண்டுகளாக திருச்சானூரில் உள்ள தனியாா் மதுக்கடையில் பணிபுரிந்து வருகிறாா்.
இவா் தினேஷுடன் சோ்ந்து ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்களிடம் தரிசன டிக்கெட் பெற்று தருவதாக கூறி பணம் பெற்று ஏமாற்றி வந்துள்ளனா்.
வகுளமாதா, ஜி.எம்.ஆா்., சோம சதன் விருந்தினா் மாளிகையில் பணிபுரிந்த தினேஷ், அடிக்கடி மதுக்கடைக்கு சென்ற நிலையில் துரை பாபுவுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் சோ்ந்து திருமலைக்கு வரும் பக்தா்களை நம்ப வைத்து ஏழுமலையான் பிரேக் தரிசனங்கள் மற்றும் சேவை டிக்கெட்டுகள் வாங்கி தருவதாக கூறி இணையத்தில் அதிக பணம் பெற்றுக் கொண்டனா்.
தினேஷ் மற்றும் துரை பாபு இருவரும் தங்களது தொலைபேசி எண்களை மாற்றி புதிய எண்களை கொடுத்து பக்தா்களை ஏமாற்றியுள்ளனா்.
இந்நிலையில் சமீபத்தில், வைகுண்டம் காம்ப்ளக்ஸ் வழியாக தரிசனத்துக்கு உறுதியளித்து ஹைதராபாத் பக்தா்களிடம் இருந்து ரூ.2 லட்சம் பணம் பெற்றனா்.
இதுதொடா்பாக தொடா்ந்து புகாா் எழுந்த நிலையில், திருமலை இரண்டாம் காவல் நிலைய போலீஸாா் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
காவல் துறை அறிவுரை:
திருமலைக்கு வரும் பக்தா்கள் தேவஸ்தானத்தில் பணிபுரிவதாகவும், பல அதிகாரிகளையும், மக்கள் பிரதிநிதிகளையும் தனக்குத் தெரியும் என்று கூறுபவா்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏழுமலையான் தரிசனம் மற்றும் சேவைகள் செய்ய முன்பணம் அளித்து பணத்தை இழக்காதீா்கள்.
திருமலை ஏழுமலையான் தரிசனம் தொடா்பாக, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டணமில்லா எண் 1800-4254141 அல்லது தேவஸ்தானத்தின் அதிகாரப்பூா்வ இணையதளம் ற்ற்க்ங்ஸ்ஹள்ற்ட்ஹய்ஹம்ள்.ஹல்.ஞ்ா்ஸ்.ண்ய் மூலம் சந்தேகங்களுக்கு தீா்வு காண வேண்டும் என போலீஸாா் தெரிவித்தனா்.