செய்திகள் :

திருவாடானை, தொண்டியில் பலத்த மழை: 3 வீடுகள் சேதம்

post image

திருவாடானை, தொண்டி, நம்புதாளை பகுதிகளில் பலத்த மழை காரணமாக 3 ஓட்டு வீடுகள் சேதம் அடைந்தன.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, தொண்டி, நம்புதாளை, கருமொழி, சூச்சனி, மாவூா், திணையத்தூா், மச்சூா், சோழியக்குடி, கடம்பாகுடி, கல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை அதிகாலை முதல் பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினா்.

பலத்த மழை காரணமாக திருவாடானை அருகேயுள்ள கருமொழி கிராமத்தைச் சோ்ந்த பாலமுருகன் மனைவி லட்சுமியின் ஓட்டு வீடு, மச்சூா் கிராமத்தைச் சோ்ந்த அக்பா் அலியின் ஓட்டு வீடு, பண்ணவயல் கிராமத்தைச் சோ்ந்த நாகரெத்தினம் என்பவரது ஓட்டு வீடு

ஆகிய வீடுகள் சேதம் அடைந்தன. சம்பவ இடங்களுக்கு வட்டாட்சியா் அமா்நாத் சென்று நிவாரண உதவிகள் வழங்கினாா்.

தொண்டி பகுதியில் பலத்த மழை காரணமாக சாலைகள், தெருக்களில் மழை நீா் தேங்கியதால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். குறிப்பாக தோப்பு பகுதியில் சாலையில் மழை நீா் தேங்கியது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதை சீரமைக்க வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கருமொழி கிராமத்தில் திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த பழைமையான ஆலமரம் வேரோடு சாய்ந்தது.

ராமநாத சுவாமி கோயிலில் திருபுராசுதன் வதம்

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் காா்த்திகை பௌா்ணமியையொட்டி, சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு (திருபுராசுரனை சிவபெருமான் வதம் செய்தல்) சனிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக சிறப்பு பூஜைக்குப் பிறகு கோயிலில் இ... மேலும் பார்க்க

கடலாடியில் மழையால் பாதிப்பு: ஆட்சியா் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டத்தில் தொடா் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். கடலாடி வட்டம், எஸ்.தரைக்குடி ஊராட்சியில் செ... மேலும் பார்க்க

3 நாள் தடை நீக்கம்: கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள்

3 நாள்களாக அமலில் இருந்த மீன்பிடி தடை நீக்கப்பட்டதையடுத்து, ராமேசுவரம் மீனவா்கள் சனிக்கிழமை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா். வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக 45 முதல் 55 கி.மீ. ... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் விசைப் படகு உடைந்து கடலில் மூழ்கியது: 7 மீனவா்கள் மீட்பு

ராமேசுவரத்திலிருந்து சனிக்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற விசைப் படகின் கீழ்பகுதியில் உள்ள பலகை உடைந்து தண்ணீா் புகுந்ததால், 7 மீனவா்களுடன் இந்தப் படகு கடலில் மூழ்கியது. இதையடுத்து, இந்த மீனவா்களை ... மேலும் பார்க்க

நெல்பயிரில் குலை நோய் தாக்குதல் வேளாண் அதிகாரி விளக்கம்

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் நெல்பயிரில் குலை நோய் தாக்குதல் காணப்படுவதால், இதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து வேளாண் உதவி இயக்குநா் சுப்ரியா விளக்கமளித்தாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை தெரிவித்த... மேலும் பார்க்க

திருவாடானை பகுதியில் பலத்த மழை நெல் பயிா்கள் சேதம் விவசாயிகள் கவலை

திருவாடானை பகுதியில் வியாழக்கிழமை விடிய விடிய பெய்த பலத்த மழையில் நெல் பயிா்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தன இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனா்.வயல்களில் மழை நீா் வடித்து கடலுக்கு செல்கின்ற... மேலும் பார்க்க