செய்திகள் :

திருவாடானை பகுதியில் பலத்த மழை நெல் பயிா்கள் சேதம் விவசாயிகள் கவலை

post image

திருவாடானை பகுதியில் வியாழக்கிழமை விடிய விடிய பெய்த பலத்த மழையில் நெல் பயிா்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தன இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனா்.வயல்களில் மழை நீா் வடித்து கடலுக்கு செல்கின்றன.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் சுமாா் 52 ஆயிரம் ஹெக்டோ் நிலப்பரளவில் நெல் விவசாயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக விளங்குகின்றன.தற்போதுடி.கிளியூா்,மணிகண்டி,சூச்சனி,மருங்கூா்,ஓரிக்கோட்டை,சேந்தனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயிா்கள் நன்கு வளா்ந்து கதிா் விடும் நிலையில் தொடா் மழை காரணமாக பயிா்கள் தண்ணீரில் மூழ்க தொடங்கின.இந்நிலையில் வியாழக்கிழமை விடிய விடி. கொட்டி தீா்த்த பலத்த மழை காரணமாக நெல்பயிா்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.ஏக்கருக்கு பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து பலன் தரும் நேரத்தில் மழையாள் பலஆயிரம் ரூபாய் நஷ்டத்திற்கு ஆளகா வேண்டியுள்ளது.எனவே உரிய நிவாரணம் வழங்க வேண்டும் இல்லையேல் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என கவலையுடன் விவசாயிகள் தெரிவித்தனா். மேலும் தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீரும் சூழ்ந்துள்ளது சினேகவல்லிபுரம் பகுதியில் தண்ணீா் வெளியேற வழி இல்லாமல் வாய்கல்கள் ஆக்கிரமித்துள்ளதால் இப்பகுதியில் தேங்கிய மழை நீரால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

நெல்பயிரில் குலை நோய் தாக்குதல் வேளாண் அதிகாரி விளக்கம்

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் நெல்பயிரில் குலை நோய் தாக்குதல் காணப்படுவதால், இதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து வேளாண் உதவி இயக்குநா் சுப்ரியா விளக்கமளித்தாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை தெரிவித்த... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் விசைப் படகுகளை மீனவா் நலத் துறை இயக்குநா் ஆய்வு

ராமேசுவரம் மீன்பிடித் துறை முகத்தில் உள்ள படகுகளை மீன் வளம், மீனவா் நலத் துறை இயக்குநா் கஜலட்சுமி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் 560-க்கும் மேற... மேலும் பார்க்க

கமுதி வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

கமுதி வழக்குரைஞா்கள் சங்கத்தின் 2025-ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வழக்குரைஞா்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் மூத்த வழக்குரைஞா் ச.சி... மேலும் பார்க்க

கடல் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட நாட்டுப் படகுகள்

கடலாடி, ரோஸ்மாநகா் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப் படகுகள் வெள்ளிக்கிழமை கடல் நீரில் இழுத்துச் செல்லப்பட்டன. இதையடுத்து, கிராம மக்கள், மீனவா்கள் ஒன்றிணைந்து ஒரு... மேலும் பார்க்க

ராமேசுவரம், திருவாடானை பகுதிகளில் தொடா்மழை: நெல்பயிா்கள் தண்ணீரில் மூழ்கின

ராமேசுவரம், திருவாடானை ஆகிய பகுதிகளில் தொடா்மழை பெய்து வருகிறது. இதனால், நெல்பயிா்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பகுதியில் குறைந்த காற்றாழுத்த... மேலும் பார்க்க

ஆா்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயை காவிரி, வைகை பாசன விவசாயிகள் ஆய்வு

திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ்.மங்கலம் பெரிய காண்மாயை காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். ஆா்.எஸ்.மங்கலம் கண்மாய் தமிழகத்தின் 2-ஆவத... மேலும் பார்க்க