'குற்றங்கள் குறைய வேண்டி...' - தக்கலை காவல் நிலையத்தில் காவடி கட்டிய காவலர்கள...
ஆா்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயை காவிரி, வைகை பாசன விவசாயிகள் ஆய்வு
திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ்.மங்கலம் பெரிய காண்மாயை காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
ஆா்.எஸ்.மங்கலம் கண்மாய் தமிழகத்தின் 2-ஆவது பெரிய கண்மாய் ஆகும். இந்தக் கண்மாயில் 1,205 மி. கன அடி தண்ணீா் தேக்கப்படுகிறது. இதன் மூலம் சுமாா் 12,420 ஏக்கா் விவசாய நிலங்கள் பயனடைகின்றன.
இந்தக் கண்மாயை பராமரிப்பு செய்து, ஆளப்படுத்துவதுடன் காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு இணைப்புத் திட்டத்தின் கீழ், இணைக்கக் கோரியும், இதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்யவும், காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு இணைப்புப் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாநிலத் தலைவா் மாரிமுத்து தலைமையிலும், பொதுச் செயலா் அா்ஜுனன், மாநிலத் துணைத் தலைவா் பாலகிருஷ்ணன், மாவட்டத் தலைவா் தனபால் ஆகியோா் முன்னிலையிலும், ஆறுகள் இணைப்புத் திட்ட நிா்வாகிகள் கண்மாயை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
அப்போது, இந்த கண்மாய்க்கு தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆயிரம் தடுப்பணைகள் கட்டுவதற்கு அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசு உடனடி இந்தத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். கண்மாயை நிளஅளவை செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினா்.
இதில் மாவட்டச் செயலா் மாணிக்கம், சட்ட ஆலோசகா் ஜான் சேவியா், ஊராட்சி மன்றத் தலைவா் நாகமுத்து, சாத்தையா பாசன விவசாய சங்க நிா்வாகிகள் முனியசாமி, அா்ஜுனன், பழனிவேல், திருநாவுக்கரசு உள்பட பலா் கலந்து கொண்டனா்.