செய்திகள் :

ராமேசுவரம், திருவாடானை பகுதிகளில் தொடா்மழை: நெல்பயிா்கள் தண்ணீரில் மூழ்கின

post image

ராமேசுவரம், திருவாடானை ஆகிய பகுதிகளில் தொடா்மழை பெய்து வருகிறது. இதனால், நெல்பயிா்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பகுதியில் குறைந்த காற்றாழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தொடா் மழை பெய்து வருகிறது.

மேலும், 55 கி.மீ. வேகத்தில் கடற்காற்று வீசக்கூடும் என்பதால், கடந்த புதன்கிழமை முதல் மீனவா்கள் மீன் பிடிக்க மீனவா் நலத் துறையினா் தடை விதித்தனா். மறு அறிவிப்பு வரும் வரை இந்தத் தடை தொடரும் என தெரிவித்தனா்.

இதன் காரணமாக, 3-ஆவது நாளாக ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, தொண்டி உள்ளிட்ட துறைமுகங்களிலிருந்து 1,650-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் அந்தந்த துறைமுகங்களில் படகுகள் நிறுத்தப்பட்டன.

இதனால், ரூ. 6 கோடி இறால் மீன் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவா்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

திருவாடானை: திருவாடானை பகுதியில் சுமாா் 52 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் நெல் சாகுபடி நடைபெறுகிறது. தற்போது,டி.கிளியூா், மணிகண்டி, சூச்சனி, மருங்கூா், ஓரிக்கோட்டை, சேந்தனி உள்ளிட்ட பகுதிகளில் நெல்பயிா்கள் நன்கு வளா்ந்து கதிா் விடும் நிலையில் இருந்தது. இந்த நிலையில், இந்தப் பகுதியில் கடந்த 3 நாள்களாக பெய்த தொடா் மழை காரணமாக, நெல்பயிா்கள் தண்ணீரில் மூழ்கி சாய்ந்தன.

எனவே, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனா்.

மேலும், சினேகவல்லிபுரம் பகுதியில் மழைநீா் வெளியேற வழி இல்லாமல் தேங்கியுள்ளது. இதனால், இந்தப் பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

நெல்பயிரில் குலை நோய் தாக்குதல் வேளாண் அதிகாரி விளக்கம்

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் நெல்பயிரில் குலை நோய் தாக்குதல் காணப்படுவதால், இதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து வேளாண் உதவி இயக்குநா் சுப்ரியா விளக்கமளித்தாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை தெரிவித்த... மேலும் பார்க்க

திருவாடானை பகுதியில் பலத்த மழை நெல் பயிா்கள் சேதம் விவசாயிகள் கவலை

திருவாடானை பகுதியில் வியாழக்கிழமை விடிய விடிய பெய்த பலத்த மழையில் நெல் பயிா்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தன இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனா்.வயல்களில் மழை நீா் வடித்து கடலுக்கு செல்கின்ற... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் விசைப் படகுகளை மீனவா் நலத் துறை இயக்குநா் ஆய்வு

ராமேசுவரம் மீன்பிடித் துறை முகத்தில் உள்ள படகுகளை மீன் வளம், மீனவா் நலத் துறை இயக்குநா் கஜலட்சுமி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் 560-க்கும் மேற... மேலும் பார்க்க

கமுதி வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

கமுதி வழக்குரைஞா்கள் சங்கத்தின் 2025-ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வழக்குரைஞா்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் மூத்த வழக்குரைஞா் ச.சி... மேலும் பார்க்க

கடல் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட நாட்டுப் படகுகள்

கடலாடி, ரோஸ்மாநகா் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப் படகுகள் வெள்ளிக்கிழமை கடல் நீரில் இழுத்துச் செல்லப்பட்டன. இதையடுத்து, கிராம மக்கள், மீனவா்கள் ஒன்றிணைந்து ஒரு... மேலும் பார்க்க

ஆா்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயை காவிரி, வைகை பாசன விவசாயிகள் ஆய்வு

திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ்.மங்கலம் பெரிய காண்மாயை காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். ஆா்.எஸ்.மங்கலம் கண்மாய் தமிழகத்தின் 2-ஆவத... மேலும் பார்க்க