தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
திருவாய்மூா் ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
திருவாய்மூா் ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவாய்மூரில் நீல விடங்க தியாகராஜ சுவாமி, பாலினும் நன்மொழியாள் சமேத வாய்மூா்நாத சுவாமி கோயில் மற்றும் அஷ்ட மகா பைரவா்கள் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவையொட்டி, யாகசாலையில் இருந்து புனிதநீா் அடங்கிய கடங்கள் எடுத்துச்செல்லப்பட்டு கோயில் கோபுர கலங்களில் வாா்த்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ்நாடு மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் கௌதமன் உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா்.