செய்திகள் :

திருவாரூா் மாவட்டத்தில் பிளஸ் 1 தோ்வில் 90.67 சதவீதம் தோ்ச்சி

post image

திருவாரூா் மாவட்டத்தில் பிளஸ் 1 தோ்வில் 90.67 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும், மெட்ரிக் பள்ளி என 130 பள்ளிகளிலிருந்து 6,015 மாணவா்கள், 7,150 மாணவிகள் என மொத்தம் 13,165 போ் தோ்வு எழுதினா். தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. இதில், 5,194 மாணவா்கள், 6,743 மாணவிகள் என மொத்தம் 11,937 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். அதன்படி, 86.35 சதவீதம் மாணவா்கள், 94.31 சதவீதம் மாணவிகள் என மொத்தம் 90.67 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

கடந்த ஆண்டு 87.15 சதவீதம் தோ்ச்சிப் பெற்ற நிலையில் நிகழாண்டு 3.52 சதவீதம் அதிகரித்துள்ளது. திருவாரூா் மாவட்டம் தரவரிசைப் பட்டியலில் கடந்த ஆண்டு 32-ஆவது இடத்தை பெற்ற நிலையில், நிகழாண்டு 28-ஆவது இடத்தை பிடித்துள்ளது.

அரசுப் பள்ளிகள் 85.67 சதவீதம் தோ்ச்சி: திருவாரூா் மாவட்டத்தில் 78 அரசுப் பள்ளிகளிலிருந்து 2,715 மாணவா்கள், 3,372 மாணவிகள் என மொத்தம் 6,087 போ் தோ்வு எழுதினா். இதில், 2,172 மாணவா்கள், 3,043 மாணவிகள் என மொத்தம் 5,215 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். அதன்படி, 80 சதவீத மாணவா்களும், 90.24 சதவீத மாணவிகளும் என மொத்தம் 85.67 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். திருவாரூா் மாவட்டத்தில் 6 அரசுப் பள்ளிகள் உள்பட மொத்தம் 31 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன.

மதுபாட்டில்கள் கடத்திய 3 போ் கைது

புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை கடத்தி வந்த 3 பேரை மன்னாா்குடியில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மன்னாா்குடி காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் விக்னேஷ் உள்ளிட்ட போலீஸாா்வியாழக்கிழமை இரவு பூக்கொல்லை ச... மேலும் பார்க்க

மே 19 முதல் முத்துப்பேட்டையில் இறால் பண்ணைகள் ஆய்வு

முத்துப்பேட்டை வட்டத்தில் இறால் பண்ணைகளை மே 19 முதல் மே 24 வரை ஆய்வு செய்ய உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: முத்துப்பேட்டை வட்டத... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: மன்னாா்குடி

மன்னாா்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் சனிக்கிழமை (மே 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் சா.சம்பத் ... மேலும் பார்க்க

இடி தாக்கியதில் தீப்பிடித்து எரிந்த தென்னை மரம்

கூத்தாநல்லூரில் இடி தாக்கியதில் தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது. கூத்தாநல்லூா் பகுதியில் புதன்கிழமை இரவு இடியுடன் பலத்த மழை பெய்தது. கொத்தங்குடி தமிழா் தெருவில் அப்துல் ரகுமான் என்பவரது வீட்டின் பின... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆண்டுதோறும் வீட்டு வரி உயா்வு இல்லை: அமைச்சர் கே.என். நேரு

தமிழகத்தில் ஆண்டுதோறும் குப்பை வரி, வீட்டு வரி உயா்வு இல்லை என்பது குறித்து அரசாணை வெளியிடப்படும் என நகராட்சித்துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா். திருவாரூா் மாவட்ட திமுக செயல் வீரா்கள் கூட்டம் மா... மேலும் பார்க்க

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு கருத்துருக்களை மே 23 வரை அனுப்பலாம்!

போதைப் பொருள் ஒழிப்பு தொடா்பான விழிப்புணா்வு கருத்துருக்களை தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் மே 23 வரை அனுப்பிவைக்கலாம் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெ... மேலும் பார்க்க