வட இந்தியாவில் முதல்முறை..! 150-க்கும் அதிகமான திரைகளில் டிடி நெக்ஸ்ட் லெவல்!
போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு கருத்துருக்களை மே 23 வரை அனுப்பலாம்!
போதைப் பொருள் ஒழிப்பு தொடா்பான விழிப்புணா்வு கருத்துருக்களை தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் மே 23 வரை அனுப்பிவைக்கலாம் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவாரூா் மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் நாஷா முக்த் பாரத் அபியான் திட்டத்தின் சாா்பில் போதைப் பொருட்கள் ஒழிப்பு தொடா்பாக, பொது மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்கீழ் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவது, உயா்கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் ஆகியவற்றில் போதைப் பொருள் தடுப்பது குறித்த விழிப்புணா்வு, குழந்தைகள் இளைஞா்கள், இளம் பருவத்தினா் மற்றும் பெரியவா்களை தாக்கும் போதைப் பொருட்கள் பயன்பாட்டை தடுப்பது, சமூகத்தில் அனைவருக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலான திட்டங்களை செயல்படுத்துவது போன்றவற்றை செயல்படுத்த தகுதியான தன்னாா்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதி வாய்ந்த தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள், தங்களின் கருத்துருக்களை மே 23-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆட்சியா் அலுவலக இணைப்புக் கட்டடம், 3-ஆவது தளம், திருவாரூா்- 610 004 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.