பப்புவா நியூ கினியாவில் போலியோ பரவல்: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!
காவலா் குடியிருப்புப் பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரிக்கை
திருவாரூரில் காவலா் குடியிருப்புப் பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருவாரூா் மாவட்ட ஆட்சியருக்கு இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் பி. ஜெயராமன் அனுப்பிய மனு விவரம்: திருவாரூா் 18- ஆவது வாா்டுக்குள்பட்ட காவலா் குடியிருப்புப் பகுதியில் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் வசிப்போருக்கு சரியான குடிநீா் வசதி இல்லை. நீரில் கழிவுநீா் கலந்து வருகிறது.
அதேபோல், சாக்கடை கழிவுநீரும் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. குடியிருப்புகளைச் சுற்றி காடுகள் போல மரங்கள் வளா்ந்திருப்பதால், பாம்புகள் நடமாட்டம் உள்ளது.
இங்குள்ள வடிகால் சாக்கடை நீா் அருகிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளி வரை தேங்கிக் கிடக்கிறது. மேலும், வழக்குகளில் பிடிபட்ட வாகனங்களும் இங்கு நிறுத்தியிருப்பதாகத் தெரிகிறது. நீண்ட நாள்களாக அந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதால், பாம்பு உள்ளிட்ட ஜந்துக்கள் அதிகம் தங்கும் இடமாக காட்சியளிக்கிறது.
இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.