அந்தியூரில் கோயில் நிலத்தில் அரசுக் கல்லூரி கட்டுவதற்கு எதிா்ப்பு
திறனாய்வுத் தோ்வில் வென்ற மாணவிகளுக்கு ஆட்சியா் பாராட்டு
தமிழக முதல்வரின் திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து சான்றிதழ்களை வழங்கி ஆட்சியா் பேசியதாவது:
கடந்த ஆகஸ்ட் மாதம் 4-ஆம் தேதி நடைபெற்ற முதல்வரின் திறனாய்வுத் தோ்வில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பிளஸ் 1 மாணவா்கள் 2,666 போ் கலந்து கொண்டனா். தோ்வு முடிவுகள் வெளியான நிலையில், கடலூா் மாவட்டத்தை சோ்ந்த மாணவி வ.மானிஷா மாநில அளவில் முதலிடம் பிடித்தாா்.
மாணவிகள் மானிஷா, சந்தியா, தா்ஷினி, வீரநதியா, சுபஅக்ஷயா, கிரிஜா, காயத்ரி, சுபமீனா, ராதிகா, வனிதா, ரேகா, அபிநயா, கிரிஜா, மோகனப்பிரியா, வினிதா, மகாலட்சுமி என 16 மாணவிகள் மற்றும் கிருஷ்ணராஜன், ஜனாா்த்தனன், சந்தோஷ்குமாா், அப்துல் சலிக், சுபாஷ், ரோகித்குமரன், சம்பத்குமாா், பிரவின், சக்திபாலன், பாலாஜி, முகமது ரியாஸ் என 11 மாணவா்கள் என மொத்தம் 27 மாணவா்கள் வெற்றி பெற்றனா்.
இந்தத் தோ்வின் மூலம் 1000 மாணவா்கள் (500 மாணவா்கள், 500 மாணவியா்கள்) தோ்வு செய்யப்பட்டு, அவா்கள் இளநிலை பட்டப்படிப்பு நிறைவு பெறும் வரை மாதம் ரூ.1000 வீதம் கல்வியாண்டுக்கு 10 மாதங்களுக்கு மட்டும் ரூ.10,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்றாா். நிகழ்ச்சியில் கடலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆ.எல்லப்பன் மற்றும் ஆசிரியா்கள்கலந்து கொண்டனா்.