பெங்களூரு: கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கேட்டரிங் பெண்!
தில்லி அமைச்சரவையில் துறைகள் ஒதுக்கீடு!
தில்லி அமைச்சரவைக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 48 இடங்களில் வென்ற பாஜக, ஆம் ஆத்மியிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றி 27 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆட்சியமைத்துள்ளது. தில்லி முதல்வரையும் பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவரையும் தேர்ந்தெடுக்கும் கூட்டத்தில், தில்லி முதல்வராக ரேகா குப்தா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, தில்லி ராம்லீலா மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற விழாவில் முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றுக் கொண்டார். சுஷ்மா ஸ்வராஜ், ஷீலா தீட்சித், அதிஷி ஆகியோருக்குப் பிறகு நான்காவது பெண் முதல்வர் என்கிற பெருமையை ரேகா குப்தா பெற்றுள்ளார்.
இதையும் படிக்க...முதல் பேரவைத் தேர்தலிலேயே முதல்வர் பதவி..! யார் இந்த ரேகா குப்தா?
தில்லி அமைச்சர்களாக பர்வேஷ் வர்மா, ஆஷிஷ் சூட், மஞ்சிந்தர் சிங் சிர்ஷா, ரவீந்தர் இந்தரராஜ் சிங், கபில் மிஸ்ரா மற்றும் பங்கஜ் குமார் சிங் ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர். பர்வேஷ் வர்மா துணை முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், தில்லி அமைச்சரவையில் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவர்களில் முதல்வர் ரேகா குப்தாவுக்கு உள்துறை மற்றும் நிதித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. துணை முதல்வர் பர்வேஷ் சிங் வர்மாவுக்கு கல்வி, பொதுப் பணித்துறை மற்றும் போக்குவரத்துத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மஞ்சிந்தர் சிங் சிர்ஷாவுக்கு சுகாதாரம், நகர்ப்புற மேம்பாடு, கபில் மிஸ்ராவுக்கு குடிநீர் மற்றும் சுற்றுலாத் துறையும், இந்திரராஜுக்கு சமூக நலன், எஸ்சி/எஸ்டி நலத்துறை மற்றும் தொழிலாளர் நலன் துறையும், ஆஷிஷ் சூட்டுக்கு வருவாய் மற்றும் சுற்றுச்சூழல் துறையும், பங்கஜ் குமார் சிங்குக்கு சட்டத்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க... தில்லியில் பாஜக அரசுக்குக் காத்திருக்கும் புதிய சவால்கள்!