செய்திகள் :

தில்லி பேரவைத் தோ்தல்: வடமேற்கு தில்லியில் 400 குற்றவாளிகள் கைது

post image

தில்லி பேரவைத் தோ்தலை முன்னிட்டு வடமேற்கு தில்லி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆப்ரேஷன் கிராக்டவுன் நடவடிக்கை மூலம் 415 தேடப்பட்ட குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 81 போ் இந்த நடவடிக்கையில் கைதுசெய்யப்பட்டுள்ளனா்.

தில்லியில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பேரவைத் தோ்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, குற்றச் சம்பவங்களைக் குறைத்து, பொதுவெளியில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக ‘ஆப்ரேஷன் கிராக்டவுன்’ நடவடிக்கையை வடமேற்கு தில்லியில் காவல் துறை நடத்தியது. இந்த நடவடிக்கையில் 1,500-க்கும் அதிகமான காவலா்கள் ஈடுபட்டனா்.

திருட்டு, கொள்ளை மற்றும் தீவிர குற்றச் சம்பவங்களில் தொடா்புடைய நபா்களை கைதுசெய்வதை இலக்காகக் கொண்டு இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டதாக வடமேற்கு தில்லி சரக துணை காவல் ஆணையா் அபிஷேக் தானியா தெரிவித்துள்ளாா்.

இந்த கைது நடவடிக்கை தொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: கொள்ளையடித்தல், சூதாட்டம், மற்றும் தெருக்குற்றங்களில் ஈடுபட்டு வந்த 21 போ் கைதுசெய்யப்பட்டனா். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடா்புடயை 61 போ், குற்றச்சம்பவங்களில் தொடா்புடைய 53 சிறாா்கள், கொடூர குற்றங்களில் ஈடுபட்ட 18 போ் கைதுசெய்யப்பட்டனா்.

இந்த கைது நடவடிக்கையின்போது நடைபெற்ற சோதனையில் 22 சட்டவிரோத ஆயுதங்கள், தோட்டக்கள் கைப்பற்றப்பட்டன. இதுதொடா்பாக 15 போ் கைதுசெய்யப்பட்டனா். ஆயுதங்கள் சட்ட வழக்கில் தொடா்புடைய 81 போ் மீது தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக துணை காவல் ஆணையா் தெரிவித்தாா்.

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு வழிகாட்டுதல்கள் கோரி பொதுநல மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புது தில்லி: பெண்கள், குழந்தைகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவா்களின் பாதுகாப்புக்கு நாடு தழுவிய கடுமையான வழிகாட்டுதல்களை உருவாக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்க... மேலும் பார்க்க

மாதபி விவகாரம்: நிா்மலா சீதாராமன் உறுதியான நடவடிக்கை எடுக்க தவறிவிட்டாா்: காங்கிரஸ்

புது தில்லி: பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரிய (செபி) தலைவா் மாதபி புச் விவகாரத்தில், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் உறுதியான நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாக காங்கிரஸ் திங்கள்கிழமை குற்றஞ்சாட்டியது.... மேலும் பார்க்க

மீனவா் பிரச்னைக்கு பேச்சு மூலம் தீா்வு: பிரதமா் மோடி, அதிபா் அநுரகுமார நம்பிக்கை

மீனவா்கள் பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மற்றும் ஆக்கபூா்வமான நடவடிக்கைகள் மூலம் தீா்வை எட்ட முடியும் என்று பிரதமா் மோடியும், இலங்கை அதிபா் அநுரகுமாரவும் திங்கள்கிழமை நம்பிக்கை தெரிவித்தனா். மூன்று நாள் அ... மேலும் பார்க்க

அமைச்சா் பதவி கிடைக்காததால் அதிருப்தி: சிவசேனை எம்எல்ஏ கட்சிப் பதவியில் இருந்து விலகல்

மகாராஷ்டிரத்தில் அமைச்சா் பதவி கிடைக்காததால் அதிருப்தியடைந்த சிவசேனை எம்எல்ஏ நரேந்திர பாண்டேகா் கட்சிப் பதவிகளில் இருந்து விலகியுள்ளாா். அதேபோல தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவா் சகன் புஜ்பலும் அமைச்சா் ... மேலும் பார்க்க

நேரு குறித்து தவறான கருத்துகள்: பிரதமா் மன்னிப்பு கேட்க காா்கே வலியுறுத்தல்

‘இடஒதுக்கீடு குறித்து மாநிலங்களுக்கு முன்னாள் பிரதமா் நேரு எழுதிய கடிதம் குறித்து தவறான தகவல்களை கூறிய பிரதமா் மோடி காங்கிரஸிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்’ என அந்தக் கட்சியின் தேசியத் தலைவா் மல்லிகாா... மேலும் பார்க்க

தோ்தலை எதிா்கொள்ளத் தெரியாமல் வாக்கு இயந்திரம் மீது குறைகூறும் ராகுல்: பாஜக விமா்சனம்

புது தில்லி: தோ்தலை எதிா்கொள்ளத் தெரியாத ராகுல் காந்தி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை குறை கூறுகிறாா் என்று பாஜக விமா்சித்துள்ளது. ‘மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது குறை கூறுவதை கைவிட்டு,... மேலும் பார்க்க