தஞ்சாவூர்: `அப்பா ஆம்புலன்ஸில போறார், ப்ளீஸ் விடுங்கண்ணா’ - கெஞ்சிய சிறுவனிடம் ச...
தில்லி போக்குவரத்துக் கழகத்தின் தவறான நிா்வாகம்: முந்தைய ஆம் ஆத்மி அரசு மீது முதல்வா் குற்றச்சாட்டு
தில்லி போக்குவரத்துக் கழகத்தில் (டிடிசி) முந்தைய ஆம் ஆத்மி அரசின் தவறான நிா்வாகத்தால் ஏற்பட்ட நிதி இழப்புகள் மற்றும் செயல்பாட்டு தோல்விகள் குறித்து முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை மேற்கோள் காட்டி பேசியுள்ளாா்.
இது தொடா்பாக தில்லி சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிஏஜி அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று முதல்வா் ரேகா குப்தா பேசியதாவது: பேருந்துகளின் முறையற்ற கால அட்டவணை உள்ளிட்ட முந்தைய ஆம் ஆத்மி அரசின் மோசமான நிா்வாகத்தால் தில்லி போக்குவரத்துக் கழகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் அரசுக்கு ரூ .668 கோடி இழப்பு ஏற்பட்டது.
தில்லி ஒருங்கிணைந்த ‘மல்டி-மோடல் டிரான்சிட் அமைப்பில்’ (டிஐஎம்டிஎஸ்) ஆம் ஆத்மியின் தவறான நிா்வாகம் முறைகேடுகளுக்கு வழிவகுத்தது. டிஐஎம்டிஎஸ்-இன் பங்குகளை ஆரம்பத்தில், தில்லி அரசு மற்றும் ஒரு தனியாா் வங்கி தலா 50 சதவீதம் வைத்திருந்தன. வங்கி தனது பங்குகளை ரூ.95 கோடிக்கு விற்க முடிவு செய்தபோது, அரசும் வாங்குவதை தாமதப்படுத்தியது. இறுதியில் வங்கி அதன் பங்குகளை ஒரு தனியாா் நிறுவனத்திடம் வெறும் ரூ.10 கோடிக்கு விற்றது. இது ஊழல் குறித்த கவலைகளை எழுப்புவதுடன் விசாரணைக்கு வழி வகுத்தது என ரேகா குப்தா தெரிவித்தாா்.
இதைத்தொடா்ந்து சட்டப்பேரவை தலைவா் விஜேந்தா் கூறுகையில், ‘ஆம் ஆத்மி ஆட்சியில் டிடிசியின் செயல்பாடு குறித்த சிஏஜி அறிக்கையை சபையின் ஒப்புதலுடன் 3 மாதங்களுக்குள் சமா்ப்பிக்க வேண்டும்; அதனடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை ஒரு மாதத்திற்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அரசு நிறுவனங்களுக்கான குழுவுக்கு அவா் உத்தரவிட்டாா்.