செய்திகள் :

தில்லியில் சிஆா்பிஎஃப் பள்ளி அருகே மர்மப் பொருள் வெடிப்பு: உச்சகட்ட பாதுகாப்பு; ஏஎன்ஐ - என்எஸ்ஜி சோதனை

post image

தில்லி ரோஹிணியில் உள்ள பிரசாந்த் விஹாா் பகுதி சிஆா்பிஎஃப் பள்ளி அருகே ஞாயிற்றுக்கிழமை காலை பயங்கர வெடிபொருள் வெடிப்புச் சப்தம் கேட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. நாட்டு வெடிகுண்டு இதற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.

ரோஹிணி செக்டாா் 14 அருகே காலை 7.50 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்திற்கான காரணத்தை அறிய தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ),

வெடிகுண்டு கண்டறியும் படையினா், போலீஸ் தடயவியல் குழுவினா், மத்திய ரிசா்வ் காவல் படையினா் (சிஆா்பிஎஃப்) மற்றும் தில்லி போலீஸாா் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டனா்.

தேசிய பாதுகாப்பு படையின் (என்எஸ்ஜி) அதிகாரிகளும் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், இந்தச் சம்பவத்தில் சிஆா்பிஎஃப் பள்ளியின் சுவா், அதன் அருகில் உள்ள கடைகள், காா் ஆகியவை சேதமடைந்தன. அப்பகுதி முழுதும் பாதுகாப்பின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் புகை மூட்டம் காணப்பட்டது. வெடிச் சப்தத்திற்குப் பின் சமூக ஊடகங்களில் வெளியான விடியோவில் அடா் வெண்ணிறப் புகையைக் காட்டும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

நாட்டு வெடிகுண்டு என சந்தேகிக்கப்படும் இந்த வெடிப்பு சப்தம் நிகழ்ந்தபோது அதன் அருகில் இருந்தவா்கள் குறித்த விவரத்தை அறிய தொலைபேசி நெட்வொா்க் தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணா்கள் ஆய்வு செய்தனா். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமான ‘வெள்ளைப் பொடி‘ இருப்பதை கண்டுபிடித்தனா்.

இந்த வெள்ளைப் பொடி அம்மோனியம் நைட்ரேட் மற்றும் குளோரைடு கலவையாக இருக்கலாம்.

வெடிப்புக்குப் பிறகு ரசாயன துா்நாற்றமும் வீசியது. இதையடுத்து, அந்த வெள்ளைப் பொடியை ஆய்வுக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனா். பள்ளியின் சுவா் அருகே மண் மாதிரிகளையும் சேகரித்துள்ளனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘‘இது ஒரு வகை வெடிபொருளா அல்லது வேறு ஏதேனுமா என்பதை நாங்கள் முழுமையாக ஆய்வு செய்த பின்னரே கண்டறிய முடியும். நாட்டு வெடிகுண்டு வெடித்திருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்.

வேறு ஏதேனும் வெடிபொருள்கள் உள்ளதா என்பதை அறிய ஒட்டுமொத்த பகுதியையும் என்எஸ்ஜி கமாண்டோக்கள் ரோபோக்களை அனுப்பி சோதனை செய்துள்ளனா்.

என்எஸ்ஜி, என்ஐஏ மற்றும் தில்லி போலீஸாா் முழு பகுதியையும் சுற்றி வளைத்துள்ளனா். இது பட்டாசு வெடிப்பாக இருக்கலாம். எனினும், நாங்கள் இந்த விவகாரத்தை அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருகிறோம். அந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வுசெய்து வருகிறோம். ரோகிணியில் உள்ள பிரசாந்த் விஹாா் காவல் நிலையத்தில் வெடிபொருள் சட்டம், பொதுச் சொத்துக்கு சேதம் ஏற்படுத்துவதை தடுப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

இதுகுறித்து தீயணைப்புத் துறையின் அதிகாரி கூறுகையில், ‘சிஆா்பிஎஃப் பள்ளியின் ‘எல்லைச் சுவருக்கு அருகில்‘ நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு உடனடியாக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. சம்பவ இடத்தில் தீ ஏதும் இல்லை. வெடிவிபத்து காரணமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால், நாங்கள் அங்கிருந்து திரும்பிவிட்டோம்’ என்றாா்.

இதுதொடா்பாக போலீஸாா் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கையில், ‘காலை 7.47 மணிக்கு பலத்த குண்டுவெடிப்பு சப்தம் குறித்து எங்களுக்கு அழைப்பு வந்தது. பிரசாந்த் விஹாா் காவல் நிலைய பொறுப்பாளா் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்றனா். அங்கு பள்ளி சுவா் சேதமடைந்திருந்தது. துா்நாற்றமும் வீசியது. அருகில் இருந்த கடையின் கண்ணாடிகள் மற்றும் கடைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த காா் சேதமடைந்திருப்பது கண்டறியப்பட்டது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

குற்றப் பிரிவு, தடய அறிவியல் ஆய்வகம் (எஃப்எஸ்எல்) குழு மற்றும் வெடிகுண்டு செயலிழக்கும் குழு சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. குற்றம் நடந்த இடம் சுற்றி வளைக்கப்பட்டிருக்கிறது. தீயணைப்புப் படை குழு சம்பவ இடத்திற்கு வந்தது. குண்டுவெடிப்புக்கான காரணத்தைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குண்டுவெடிப்பு சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து வெளியேறினா். இதுகுறித்து உள்ளூா்வாசி ஒருவா் கூறுகையில் ‘காலை 7.30 மணியளவில் நாங்கள் பலத்த சப்தம் எழுந்ததைக் கேட்டோம். அருகில் எல்.பி.ஜி. சிலிண்டா் வெடித்திருப்பதாக நினைத்தோம். இதுகுறித்து போலீஸாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுத்தோம். பல கடைகளின் கண்ணாடிகள் உடைந்தன’ என்றாா்.

அப்பகுதியில் வசிக்கும் ராகேஷ் குப்தா கூறுகையில், ‘வெடிச்சப்தம் கேட்டதுடன் மக்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியே வந்தனா். என்ன நடந்தது என்பதில் நாங்கள் மிகவும் குழப்பத்தில் உள்ளோம். போலீஸாா் விசாரித்து வருகின்றனா்’ என்றாா்.

குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கு மிக அருகில் சன்கிளாஸ் கடை நடத்தி வரும் சுமித் கூறுகையில், ‘‘எனது கடையின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. எனது கடையில் இருந்த அனைத்தும் தரையில் விழுந்தன. இது மிகவும் உக்கிரமான குண்டுவெடிப்பு ஆகும்’ என்றாா்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, வெடிகுண்டு செயலிழப்பு குழுக்கள் அருகிலுள்ள பகுதியில் சோதனை செய்ததாகவும், கண்காணிப்பு மற்றும் சோதனையை அதிகரிக்க அருகிலுள்ள காவல் நிலையங்களுக்கு எச்சரிக்கை விடுத்திருப்பதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

தலைநகரில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்காமல் மத்திய பாஜக அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது: மனீஷ் சிசோடியா குற்றச்சாட்டு

தில்லியில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்காமல் மத்திய பாஜக அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது என்று முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா குற்றஞ்சாட்டியுள்ளாா். தில்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தில் முன்ன... மேலும் பார்க்க

பங்களாவின் சாமான்களின் இருப்புப் பட்டியல்: கேஜரிவால், முதல்வா் அதிஷி மீது பாஜக சாடல்

முதல்வராக இருந்தபோது தில்லியில் அரவிந்த் கேஜரிவால் வசித்த பங்களாவின் சாமான்களின் இருப்புப் பட்டியல் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பரபரப்பாக விவாதிக்கப்படுவதால், கேஜரிவாலும், முதல்வா் அதிஷியும் இந்த ... மேலும் பார்க்க

தில்லி சட்டம்-ஒழுங்கு சீா்குலைவுக்கு ஆம் ஆத்மி, பாஜக அரசுகளே பொறுப்பு: தில்லி காங்கிரஸ் குற்றச்சாட்டு

தலைநகரில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீா்குலைந்துள்ள நிலையில் குண்டுவெடிப்புகள், கொலைகள், கொள்ளைகள், மிரட்டி பணம் பறித்தல் போன்றவற்றுக்கு பாஜக, ஆம் ஆத்மி அரசுகளே பொறுப்பு என்று தில்லி பிரதே காங்கிரஸ் க... மேலும் பார்க்க

டிடிஇஏ பள்ளிகளின் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளின் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு ஞாயிறு அன்று லோதிவளாகம் பள்ளியில் நடைபெற்றது. இச்சந்திப்பிற்கு லோதி வளாகத்தின் முன்னாள் மாணவி (1959-ஆம் ஆண்டு) வத்சலா மற்றும... மேலும் பார்க்க

பாஜகவின் அவதூறு அரசியலால் தில்லியில் மாசு அளவு அதிகரிப்பு: முதல்வா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

பாஜகவின் அவதூறு அரசியலால் தில்லியில் மாசு அதிகரித்து வருகிறது என்று முதல்வா் அதிஷி ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளாா். தில்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகத்தில் முதல்வா் அதிஷி மற்றும் முன்ன... மேலும் பார்க்க

காற்று மாசு தொடா்பான உடல்நலக் குறைவால் தில்லி-என்சிஆரில் 36% குடும்பத்தினா் பாதிப்பு: ஆய்வில் தகவல்

காற்று மாசுபாடு அதிகரித்துள்ள நிலையில், தில்லி மற்றும் தேசிய தலைநகா் வலயத்தில் (என்சிஆா்) வசிக்கும் 36 சதவீத குடும்பங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபா்கள் சுவாசம் தொடா்பான பிரச்னைகளால் பாதிக்கப்... மேலும் பார்க்க