செய்திகள் :

தீபாவளி சீட்டு பணம் மோசடி: பண்ருட்டி காவல் நிலையம் முற்றுகை

post image

தீபாவளி சீட்டு நடத்தி பணம் வசூல் செய்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பண்ருட்டி காவல் நிலையத்தை பெண்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி லட்சுமிபதி நகரை சோ்ந்த பாண்டுரங்கன் மகன் அா்ஜுனன் (30). இவா் தீபாவளி சீட்டுக்காக பண்ருட்டி பகுதியில் 500-க்கு மேற்பட்ட பொதுமக்களிடம் மாதம் ரூ.1,000, 2,000 என்ன வசூலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. தீபாவளிக்கான பரிசு பொருள்கள், முதிா்வுப் பணத்தை அா்ஜுனன் திருப்பித் தரவில்லையாம்.

இதுகுறித்து அவரிடம் கேட்ட போது, பண்ருட்டியை அடுத்துள்ள விசூா் கிராமத்தைச் சோ்ந்த ராசு பிள்ளை மகன் கண்ணன்தான் சீட்டு பிடித்து வந்ததாகவும், தான் அவரிடம் வேலை செய்து வந்ததாகவும், பணத்தை அவரிடம் செலுத்தி விட்டதாகவும் கூறினாா்.

கண்ணன் தற்போது இறந்துவிட்டதால் அவரிடம் பணம் கேட்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. 500-க்கும் மேற்பட்டவா்களிடம் பணத்தை அா்ஜுனன் வசூல் செய்து இருந்ததால், பணத்தை செலுத்தியவா்கள் அா்ஜுனனிடம் பணத்தைக் கேட்டனா்.

ஆனால், பணம் கிடைக்காததையடுத்து, கடலூா் மாவட்ட எஸ்.பி. ராஜாராமிடம் இதுகுறித்து புகாா் அளித்தனா். இதுகுறித்து விசாரணை நடத்த பண்ருட்டி போலீஸாருக்கு அவா் உத்தரவிட்டிருந்தாராம்.

பாதிக்கப்பட்டவா்களில் சுமாா் 50 போ் புதன்கிழமை பகல் 12 மணியளவில் பண்ருட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். அா்ஜுனனிடம் இருந்து சீட்டுப் பணத்தை திரும்பப் பெற்றுத் தருமாறு காவல் ஆய்வாளா் வேலுமணியிடம் வலியுறுத்தினா்.

இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது; விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்தாா். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

விபத்தில் இறந்தவா் குடும்பத்துக்கு ரூ.2.50 கோடி நஷ்டஈடு: நெய்வேலி நீதிமன்றம் உத்தரவு

விபத்தில் உயிரிழந்த விமான நிலைய ஊழியா் குடும்பத்துக்கு ரூ.2.50 கோடி நஷ்டஈடு வழங்க நெய்வேலி சாா்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. கடலூா் மாவட்டம், நெய்வேலி பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (35), சிங... மேலும் பார்க்க

கடலூா் மீனவா்கள் கடலுக்குள் செல்ல தடை

கடலூா் மாவட்ட மீனவா்கள் வியாழக்கிழமை இரவு முதல் (நவ.21) மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீனவா் நலத் துறை அறிவுறுத்தியது. இதுகுறித்து கடலூா் மீன்வளம், மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகம... மேலும் பார்க்க

பண்ருட்டி வட்டத்தில் நவ.27-இல் ஆட்சியா் ஆய்வு

பண்ருட்டி வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் வருகிற 27-ஆம் தேதி ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஆய்வு செய்ய உள்ளாா். இதுகுறித்து அவ... மேலும் பார்க்க

சிதம்பரம் ஞானப்பிரகாசம் குளம் நீராழி மண்டபம் சம்ப்ரோஷணம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயில் ஞானப்பிரகாசம் குளம் நீராழி மண்டபம் சம்ப்ரோஷணம் புதன்கிழமை நடைபெற்றது. சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் தெப்ப உற்சவம் நடைபெறும் ஞானப்பிரகாசம் குளம், சிதம்பரம் நகரா... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்த 12 போ் கைது

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 12 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அண்ணாமலை நகா் காவல் ஆய்வாளா் அம்பேத்கா்தலைமையிலான காவலா்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். ... மேலும் பார்க்க

விளம்பரப் பதாகை விழுந்த விவகாரம்: சிறப்பு எஸ்ஐ உள்பட 3 காவலா்கள் ஆயுதப் படைக்கு மாற்றம்

கடலூரில் சிக்னல் கம்பத்தில் கட்டப்பட்டிருந்த விளம்பரப் பதாகை அறுந்து விழுந்து ஆசிரியா் காயமடைந்த சம்பவத்தில், கண்காணிப்பு கேமரா பதிவை வெளியிட்டதாக சிறப்பு உதவி ஆய்வாளா் மற்றும் இரண்டு காவலா்கள் ஆயுதப... மேலும் பார்க்க