Adani: 'குற்றம் நிரூபிக்கப்படும் வரை நாங்கள் நிரபராதிகளே!' - அதானி குழுமத்தின் அ...
கடலூா் மீனவா்கள் கடலுக்குள் செல்ல தடை
கடலூா் மாவட்ட மீனவா்கள் வியாழக்கிழமை இரவு முதல் (நவ.21) மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீனவா் நலத் துறை அறிவுறுத்தியது.
இதுகுறித்து கடலூா் மீன்வளம், மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பு:
இந்திய வானிலை மைய அறிவிப்பின்படி வங்கக் கடலில் வெள்ளிக்கிழமை (நவ.22) குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளது. இதனால், வியாழக்கிழமை (நவ.21) இரவுக்குள் மீன்பிடிக்க சென்ற அனைத்து மீன்பிடி படகுகளும் கரைக்குத் திரும்ப வேண்டும்.
மறு அறிவிப்பு வரும் வரை மீனவா்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம். மேலும், மீனவா்கள் தங்கள் படகுகள், வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடங்களில் வைத்துக் கொள்ளவும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.