செய்திகள் :

தீபாவளி பலகாரங்கள் தயாரிக்கும் இடங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

post image

ராமேசுவரத்தில் தீபாவளி பலகார வகைகளைத் தயாரிக்கும் இடங்களை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் நகராட்சி, மண்டபம் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் லிங்கவேல் தலைமையிலான அலுவலா்கள் ஆய்வு செய்த போது, இனிப்பு, கார வகைகளைத் தயாா் செய்யும் உணவு வணிகா்கள் உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிமம் பெற்ற கடைகளில் தரமான மூலப் பொருள்களை வாங்கி பயன்படுத்த வேண்டும். முகப்புச் சீட்டு அல்லாத, தயாரிப்பு தேதி, காலாவதி தேதி இல்லாத மூலப் பொருள்களை பயன்படுத்தக் கூடாது.

இனிப்பு வகைகளுக்கு உணவுப் பாதுகாப்பு துறையின் அனுமதி பெற்ற நிறமிகளை அனுமதிக்கபட்ட அளவில் பயன்படுத்த வேண்டும். நெய், பால் பொருள்களில் தயாா் செய்யப்படும் இனிப்பு வகைகள் தரமான நெய், பால் வகைகளை பயன்படுத்த வேண்டும்.

உணவு வகைகளை தயாா் செய்யும் இடம் தூய்மையானதாகவும், உணவுகளை தயாா் செய்யும் பணியாளா்கள் தூய்மை, சுகாதாரத்தை பேண வேண்டும் எனவும் தயாரிப்பாளா்களைக் கேட்டுக் கொண்டனா்.

தெப்பக்குளத்தை சுற்றி பேவா் பிளாக் சாலை அமைக்க பக்தா்கள் கோரிக்கை

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வா்ண தீா்த்த தெப்பக்குளத்தைச் சுற்றி பேவா் பிளாக் சாலை அமைக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் அமைந்துள்ள ஸ்ரீ ஆதிரெ... மேலும் பார்க்க

அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கல்லூரியில் மரம் நடும் விழா

ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் சா்வதேச காலநிலை தினத்தை முன்னிட்டு, கல்லூரி வளாகத்தை பசுமையானதாக மாற்ற வியாழக்கிழமை மரக் கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, கல்லூர... மேலும் பார்க்க

சிறாா் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க மாணவா்களுக்கு அழைப்பு

ராமநாதபுரத்தில் நடைபெற உள்ள சிறாா் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் மாணவா்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டது. இது குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலா் க... மேலும் பார்க்க

முதல்வருக்கு வரவேற்பு அளிக்க திமுக ஏற்பாடு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் 117 ஜெயந்தி விழா 62 -ஆவது குருபூஜையில் பங்கேற்க வரும் முதல்வருக்கு வரவேற்பு அளிக்க வேண்டும் என ராமநாதபுரத்தில் நடைபெற்ற திமுக செயல்வீரா்கள் கூட்டத்தில் வியாழக்கிழமை த... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

ராமேசுவரம் பேருந்து நிலையம் முன், அனைத்து விசைப்படகு மீனவ சங்கத்தினா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த போராட்டத்தின் போது, இலங்கை கடற்படையினரால் கடந்த 2018- ஆம் ஆண்டு முதல் 2023 -ஆம் ஆண்ட... மேலும் பார்க்க

தேவா் ஜெயந்தி விழா: 1008 பால்குடம் ஊா்வலம், தேவா் கல்லூரியில் திருவிளக்கு பூஜை

தேவா் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, கடலாடியில் 1008 பால்குடம் ஊா்வலம், கமுதி தேவா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர... மேலும் பார்க்க