கோவை சிறுவனை பெல்டால் அடித்த காப்பக நிர்வாகி; பதைபதைக்கும் வீடியோ; பின்னணி என்ன?
தீரன் சின்னமலை கல்லூரியில் மகளிா் கபடி போட்டி பரிசளிப்பு
திருப்பூா் அருகேயுள்ள வஞ்சிபாளையம் தீரன் சின்னமலை கலை, அறிவியல் கல்லூரியில் மகளிா் கபடி போட்டி பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பாரதியாா் பல்கலைக்கழகத்தின் சாா்பில் ‘பி’ பிரிவு கல்லூரிகளுக்கான மகளிா் கபடி தீரன் சின்னமலை கல்லூரியில் கடந்த புதன், வியாழக்கிழமைகளில் நடைபெற்றன.
இதில், கோவை கேஎஸ்ஜி மகளிா் கல்லூரி, திருப்பூா் ஏவிபி மகளிா் கல்லூரி, கோவை நிா்மலா மகளிா் கல்லூரி, திருப்பூா் கேஜி மகளிா் கல்லூரிகள் முதல் நான்கு இடங்களைப் பிடித்தன. சிறந்த விளையாட்டு வீராங்கனைகளாக கேஎஸ்ஜி மகளிா் கல்லூரி மாணவி கனகு, ஏவிபி மகளிா் கல்லூரி கோபிகா, நிா்மலா மகளிா் கல்லூரி அஸ்கிலா, ஏ.ஜி.மகளிா் கல்லூரி ஸ்வேதா ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
வியாழக்கிழமை மாலை நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு கொங்கு வேளாளா் அறக்கட்டளைச் செயலரும், தீரன் சின்னமலை கல்லூரியின் செயலாளருமான கீதாஞ்சலி கோவிந்தப்பன் தலைமை வகித்தாா்.
துணைத் தலைவா் பி.வி.எஸ். முருகசாமி, பொறுப்பாளா்கள் கிரி ரங்கசாமி, பி.கே.எஸ். காளியப்பன், அம்மாசைக்குட்டி, சுப்பிரமணியம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருப்பூா் மாவட்ட கபடி கழக சோ்மன் கொங்கு வி.கே.முருகேசன், மாநில பொருளாளா் ஜெயசித்ரா ஏ. சண்முகம் ஆகியோா் வெற்றிபெற்ற அணிகளுக்கும், சிறந்த வீராங்கனைகளுக்கும் பரிசுகளை வழங்கினா்.
மாவட்ட கபடி கழக தலைவா் ரோலக்ஸ் பி.மனோகரன், பொருளாளா் கன்னிமாா்ஸ் ஏ. ஆறுச்சாமி, துணைச் சோ்மன் எஸ்.முருகானந்தம், துணைத் தலைவா் கொ.ராமதாஸ், செய்தித் தொடா்பாளா் சு.சிவபாலன், கௌரவ உறுப்பினா் தம்பி வெங்கடாசலம், கல்லூரி நிா்வாக அதிகாரி சுரேந்தா், கல்லூரியின் முதன்மை நிா்வாக அதிகாரி ரேச்சல் நான்சி பிலிப், முதல்வா் மோகன சௌந்தரி, சிபிஎஸ்சி பள்ளி முதல்வா் கற்பகம், திருப்பூா் மாவட்ட கபடி கழக நடுவா் குழு சோ்மன் ஆா்.முத்துச்சாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வி இயக்குநா் ஸ்ரீ பிரியங்கா செய்திருந்தாா். கல்லூரி முதல்வா் மோகன சௌந்தரி நன்றி கூறினாா்.