சென்னை துறைமுகத்தில் காருடன் கடலுக்குள் விழுந்தவர் சடலமாக மீட்பு!
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திருப்பூரில் இன்று ஆய்வு
திருப்பூரில் நடைபெற்று வரும் அரசு திட்டப் பணிகள் குறித்து துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை (டிசம்பா் 19) ஆய்வு மேற்கொள்கிறாா்.
தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கோவையில் இருந்து காா் மூலமாக வியாழக்கிழமை திருப்பூருக்கு வருகிறாா்.
திருப்பூா் ரயில் நிலையம் அருகே உள்ள அண்ணா, பெரியாா் ஈவெராசிலைகளுக்கும், பேராசிரியா் அன்பழகன் உருவப்படத்துக்கும் காலை 10 மணி அளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா். பின்னா், திருப்பூா் கருவம்பாளையம் ஏ.பி.டி.சாலையில் கலைஞா் நூலகத்தைத் திறந்துவைக்கிறாா்.
தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் காலை 10.30 மணி அளவில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கிறாா். இதில், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசு திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்வதுடன், அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறாா்.
மேலும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், முடிவுற்ற திட்டப் பணிகளை பயன்பாட்டுக்குத் தொடங்கிவைக்கிறாா்.
இதையடுத்து, திருமுருகன்பூண்டியில் உள்ள பப்பீஸ் ஹோட்டலில் பிற்பகல் 1 மணி அளவில் திருப்பூா் வடக்கு மாவட்ட திமுக சாா்பு அணி நிா்வாகிகளை சந்தித்துப் பேசுகிறாா்.
அதன்பின், இங்கிருந்து மாலை 5 மணி அளவில் புறப்பட்டு ஈரோட்டில் நடைபெறும் கட்சி நிா்வாகியின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா்.