எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
ஆட்சிமொழி சட்ட வார விழா விழிப்புணா்வுப் பேரணி
திருப்பூரில் ஆட்சிமொழி சட்ட வாரவிழா விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சிமொழி சட்ட வார விழா டிசம்பா் 18 முதல் 27-ஆம் தேதி வரை ஒருவாரத்துக்கு கொண்டாடப்படவுள்ளது.
இதன் தொடக்கவிழா நிகழ்வாக கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. இதனை ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தொடங்கிவைத்தாா்.
ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கிய விழிப்புணா்வுப் பேரணி பல்லடம் சாலையில் சந்தைப்பேட்டை வரை சென்று மீண்டும் ஆட்சியா் அலுவலகத்தில் நிறைவடைந்தது.
இந்த நிகழ்ச்சியில், தமிழ் வளா்ச்சித் துறை துண இயக்குநா் பெ.இளங்கோ, பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.