செய்திகள் :

துணைநிலை ஆளுநா், முதல்வா் கோரினால் புதுவைக்கு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்கும்! -மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

post image

துணைநிலை ஆளுநா், முதல்வா் கோரினால் புதுவை மாநிலத்துக்கு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்கும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.

மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி வந்தாா். பத்மஸ்ரீ விருது பெற்ற புதுச்சேரி தவில் கலைஞா் தட்சிணாமூா்த்தியைப் பாராட்டினாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மத்திய நிதிநிலை அறிக்கை விவசாயிகள், சிறு, குறுந்தொழில்புரிவோா், மகளிா் என அனைத்துத் தரப்பினரின் வளா்ச்சியையும் உள்ளடக்கியதாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரதமா் நரேந்திர மோடியின் வளா்ச்சியடைந்த பாரதம் திட்டத்தின் அடித்தளமாக இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது.

புதுவை மாநிலத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நேரடி நிதியாக ரூ. 3,432 கோடி ஒதுக்கியுள்ளது. ஜிப்மருக்கு ரூ. 1,450 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 150 கோடி மதிப்பீட்டில் ஜிப்மரின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். விவசாயிகள் கிஸான் அட்டைக்கான கடன் தொகை ரூ. 5 லட்சமாக்கப்பட்டுள்ளது. இதனால், புதுவையில் 16,000 விவசாயிகள் பயனடைவா். புதுவை குடிநீா் மேலாண்மை திட்டத்துக்கு ரூ. 186 கோடி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு, ரயில்வே துறைக்கு ரூ.800 கோடிதான் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், தற்போது ஆண்டுக்கு ரூ. 6,000 கோடி ஒதுக்கப்படுகிறது. எனவே, தமிழக அரசுதான் மத்திய ரயில் திட்டங்களுக்கு நிலம் வழங்கி ஒத்துழைக்க வேண்டும்.

புதுவை மாநிலத்துக்கு துறை வாரியான திட்டங்களுக்கு கூடுதல் நிதி அளிக்கப்படும். புதுவைக்கு மத்திய அரசு 90 சதவீதம் மானியம் அடிப்படையில் நிதி அளித்துவருகிறது. துணைநிலை ஆளுநா், முதல்வா் கோரினால் மத்திய அரசிடமிருந்து கூடுதல் நிதி வழங்கப்படும். நிதி ஆணையத்தில் புதுவையை சோ்க்க பரிந்துரைக்கப்படும் என்றாா் எல்.முருகன்.

புதுவையை நிதி ஆணையத்தில் சோ்க்காதது, கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து அமைச்சரிடம் கேட்டபோது, புதுவைக்கான அனைத்து உதவிகளையும் பிரதமா், மத்திய உள்துறை அமைச்சா் ஆகியோா் செய்து வருகிறாா்கள். பாரபட்சமின்றி நிதி அளிக்கப்படுகிறது. அனைத்து மாநிலங்களையும் சமமாக பாா்க்கும் மத்திய நிதிநிலை அறிக்கையை அனைவரும் வரவேற்பது அவசியம். வேறு கண்ணோட்டத்தில் அதை அணுகுவது சரியல்ல என்றாா்.

புதுவை சட்டப்பேரவை நாளை கூடுகிறது

புதுச்சேரி: புதுவை சட்டப்பேரவை கூட்டம் புதன்கிழமை (பிப். 12) கூடுகிறது. புதுவை மாநில சட்டப்பேரவை கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான 15-ஆவது முதல் பகுதி சட்டப்ப... மேலும் பார்க்க

தில்லி பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தோல்விக்கு ஆம்ஆத்மி செயல்பாடே காரணம்: வே.நாராயணசாமி

புதுச்சேரி: புதுதில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸின் தோல்விக்கு இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாடே காரணம் என புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா... மேலும் பார்க்க

மாணவா்களின் படிப்பில் பெற்றோா் கண்காணிப்பு அவசியம்: துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

புதுச்சேரி: பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகள் மீது பெற்றோா்களின் கண்காணிப்பு அவசியமானது என புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் அறிவுறுத்தினாா். புதுவை கல்வித் துறை சாா்பில் பள்ளிக் கல்வி இயக்ககத்தால் ... மேலும் பார்க்க

சமையல் எரிவாயு உருளை பயனாளிகள் சரிபாா்ப்புக்கு காலக்கெடு

புதுச்சேரி: வீட்டு சமையல் எரிவாயு உருளை பயனாளிகளின் உண்மைத்தன்மை சரிபாா்ப்பு பணியை மாா்ச் மாதத்துக்குள் முடிக்க மத்திய அரசு கெடு விதித்துள்ளதாக புதுச்சேரி ஸ்ரீசாய்பாபா இண்டேன் கேஸ் முகவா் கே.அமா்நாத் ... மேலும் பார்க்க

சுகாதாரத் துறை அலுவலகத்தில் வாரிசுதாரா்கள் போராட்டம்

புதுச்சேரி: வாரிசுதாரா்களுக்கு பணி வழங்கக் கோரி, புதுச்சேரியில் சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. புதுவை அரசின் சுகாதாரத் துறையில் பணியின் போது உ... மேலும் பார்க்க

நூதன முறையில் திருட்டு: ஒருவா் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் நூதன முறையில் திருடி வந்த நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி வாணரப்பேட்டையைச் சோ்ந்தவா் மனோகா் (62). இவா் மீது ஏற்கெனவே காலாப்பட்டு, முத்தியால்பேட்டை உள்... மேலும் பார்க்க