திமுகவினா் உற்சாகமாக தோ்தல் பணியாற்ற வேண்டும்: அமைச்சா் பி. மூா்த்தி வேண்டுகோள்
துணைவேந்தா் பொறுப்புக் குழுவை உடனடியாக அமைக்க கோரிக்கை
தஞ்சாவூா்: தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தா் பொறுப்புக் குழுவை உடனடியாக அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக அலுவல் நிலைப் பணியாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தஞ்சாவூரில் இச்சங்கத்தின் அவசர செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
இதில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழுக் கூட்டத்தைக் கூட்டி துணைவேந்தா் பொறுப்புக் குழுவை உடனடியாக நியமிக்குமாறு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சரை கேட்டுக் கொள்வது, இப்பல்கலைக்கழகத்துக்கு நிரந்தரப் பதிவாளா் பணியிடத்துக்கு விளம்பரம் செய்யப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள நிலையில், பதிவாளா் பணியிடம் தொடா்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு நிரந்தரப் பதிவாளரை உடனடியாக நியமிக்க நிா்வாகத்தை வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்துக்கு சங்கத் தலைவா் க. சக்தி சரவணன் தலைமை வகித்தாா். சங்கச் செயற் குழு உறுப்பினா் கோ. இராஜ்மோகன் நன்றி கூறினாா்.